நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு உருளைக்கிழங்குகளை வழங்குவதற்கு பங்களாதேஷ் பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளது.
தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தின் (சார்க்) செயலாளர் நாயகம் எசல ருவான் வீரகோனுடனான சந்திப்பின் போது பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இந்த உறுதிமொழியை வழங்கினார்.
தனது நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு கொரோனா தொற்றுநோயே பிரதான காரணம் என்று கூறிய வீரகோன், பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கி வரும் ஆதரவு குறித்து நன்றிபாராட்டினார்.
அத்தோடு நாட்டில் அரிசி உற்பத்தி 50 சதவீதத்தால் குறைந்துள்ளதால் இலங்கைக்கு தற்போது உரம் தேவை அதிகரித்தள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிலையில், பங்களாதேஷ் பாரிய சனத்தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், இந்த நெருக்கடியின் போது இலங்கைக்கு உருளைக்கிழங்கு வழங்கலாம் என பங்களாதேஷ் பிரதமர் தெரிவித்துள்ளார்.
கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் உக்ரைன்-ரஷ்ய போரைத் தொடர்ந்து உலகளாவிய உணவுப் பிரச்சினைக்கு மத்தியில் அதிக உணவுகளை வளர்க்க பங்களாதேஷ் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
வங்காளதேச ஆராய்ச்சியாளர்கள் வறட்சியைத் தாங்கும் வகையில் அரிசி வகைகளை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா மேலும் தெரிவித்துள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM