தபால் கட்டணத்தில் மாற்றம் தேவை !

By Vishnu

06 Jun, 2022 | 02:59 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

தபால் கட்டணத்தை உடனடியாக திருத்தம் செய்யப்பட வேண்டுமென தபால் திணைக்களம் திறைசேரியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முத்திரைக் கட்டணங்களை உடனடியாக அதிகரிக்கப்படாவிட்டால் தபால் திணைக்களத்தை நடத்துவது கடினமாகும் என தபால் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

காகித தட்டுப்பாடு காரணமாக தபால் திணைக்களத்திற்கு வங்கிகள் மற்றும் ஏனைய நிறுவனங்களிலிருந்து பெறப்படும் கடிதங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நஷ்டத்தைக் குறைப்பதற்காக தபால் திணைக்களத்தை வாரத்தில் ஒரு நாள் மூடவும் அரசாங்கம் பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right