Published by T. Saranya on 2022-06-06 13:30:18
நூற்றாண்டு பழமையான தாவரம் ஒன்றை இந்திய தாவரவியல் ஆராய்ச்சி துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அருணாசல பிரதேசத்தின் வனப்பகுதியில் இருந்து கண்டறிந்துள்ளனர்.

இந்தியாவில் அருணாசலபிரதேசத்தில் கடந்த 1912-ம் ஆண்டு, இங்கிலாந்து தாவரவியல் வல்லுனர் ஸ்டீபன் ட்ராய்ட் டன் என்பவர், 'இந்திய லிப்ஸ்டிக் தாவரம்' என்ற அரியவகை செடியை அடையாளம் கண்டறிந்தார்.
அதன்பிறகு காலப்போக்கில் அதை யாராலும் பார்க்க முடியவில்லை.
இந்நிலையில், இந்திய தாவரவியல் ஆராய்ச்சி துறையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அருணாசலபிரதேச வனப்பகுதியில் பூக்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

அப்போது, மிகவும் உட்புற பகுதியான அஞ்சா மாவட்டத்தில் ஒரு தாவர மாதிரிகளை சேகரித்தனர். அதை ஆய்வு செய்ததில், அது இந்திய லிப்ஸ்டிக் தாவரம்தான் என்று கண்டறிந்துள்ளனர்.
இதன்மூலம், 110 ஆண்டுகளுக்கு பிறகு அந்த தாவரம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அரியவகையை சேர்ந்தது. அழியக்கூடியதாக கருதப்படுகிறது.
இதன் தாவரவியல் பெயர் 'அசினந்தஸ் மோனிடேரியா டன்' ஆகும். ஈரப்பதமான, பசுமையான வனத்தில் 543 மீட்டர் முதல் 1,134 மீட்டர் உயரமான பகுதிகளில் வளரக்கூடியது.