தமிழகத்தில் சிறப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் – தமிழக முதலமைச்சரிடம் கஜேந்திரன் எம்.பி வேண்டுகோள்

Published By: Digital Desk 5

06 Jun, 2022 | 01:21 PM
image

தமிழகத்தின் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழகத்தின் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வரும் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. 

இந்நிலையில் அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் இதுவரையில் நிறைவேற்றப்படாதமை உண்மையில் ஏமாற்றத்தையும் மனவேதனையும் தருகின்றது.

இதனை கருத்திற்க் கொண்டு அவர்களை விடுவிப்பதற்கு தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப தாயகம் திரும்புவதற்கோ அல்லது தொடர்ந்தும் தமிழகத்தில் இருப்பதற்கோ உரிய ஏற்பாடுகளை தமிழக முதலமைச்சர் செய்ய வேண்டும்.

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை யுத்தம் காரணமாகவே இங்கிருந்து பலரும் வெளிநாடுகளுக்குச் சென்ற நிலையில், அவ்வாறு வருவர்களுக்கு அடைக்கலம் தருவதாக கூறி கொண்டே ஈழத்தமிழர்களை சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்திருப்பது என்பது உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.  

ஆகவே அவர்களை விடுவிப்பதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்விடயத்தில் தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு அவர்களின் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய விசேட விமானத்தில் இஸ்ரேலில் இருந்து...

2025-06-24 12:20:06
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-06-24 12:12:55
news-image

இஷாரா செவ்வந்தி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லவில்லை...

2025-06-24 11:36:26
news-image

கம்பளையில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் கைப்பற்றல்...

2025-06-24 12:19:25
news-image

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு இணையாக கொழும்பு...

2025-06-24 11:48:14
news-image

பூம்புகாரில் இன்னல்களுடன் வாழும் மக்கள் -...

2025-06-24 11:12:15
news-image

பிரதமர் ஹரிணியை சந்தித்தார் ஐ.நா. மனித...

2025-06-24 11:45:38
news-image

பலாலி மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகளை...

2025-06-24 11:11:03
news-image

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மக்களின் சிந்திக்கும்...

2025-06-24 10:45:42
news-image

இ.தொ.கா.வின் நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபைத்...

2025-06-24 12:28:45
news-image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை வெளியிட்டுள்ள...

2025-06-24 10:40:53
news-image

இராஜேஸ்வரி அம்மனை சுதந்திரமாக வழிபட அனுமதிப்பதாக...

2025-06-24 10:27:52