தமிழகத்தினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் கிளிநொச்சியில் வழங்கி வைப்பு

Published By: Digital Desk 5

06 Jun, 2022 | 12:40 PM
image

கிளிநொச்சிக்கு இன்று (06) விஜயம் செய்த இந்திய துணைத்துாதுவர் ஸ்ரீ ராகேஸ்  நடராஜ்  இந்தியாவின் தமிழக அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரண பொதிகளை வழங்கி வைத்துள்ளார். 

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இன்று (06) பகல் 10 மணிக்கு நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்திய துணைத்தூதுவர் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான உலர் உணவு பொதிகளை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.

குறித்த உதவி வழங்கும் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரச அதிபர் பிரதேச செயலாளர்கள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அரசு திணைக்களத்தின் அதிகாரிகள்  பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் அண்மையில் தமிழக அரசு அத்தியாவசிய நிவாரண பொருட்களை இலங்கைக்கு வழங்கியிருந்தது. 

அந்த வகையில் இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் கடந்த வியாழக்கிழமை (02)  கிளிநொச்சி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து  பிரதேச செயலகங்களுக்கு விநியோகிக்கும் பணிகள்  ஆரம்பிக்கப்பட்டன.

அதாவது கிளிநொச்சி மாவட்டத்திற்கு 4450 பொதிகளில் 222500 கிலோ கிராம் அரிசியும் 50 பொதிகளில் 1 கிலோ  நிறையுடைய 750 பால்மா பைக்கற்றுக்களும் கிடைக்கப்பெற்று கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 10900 பயனாளிகளுக்கும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 3720 பயனாளிகளுக்கும் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் 3380 பயனாளிகளுக்கும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 2000 பயனாளிகளுக்குமாக மொத்தமாக 20000 பயனாளிகளுக்கு இவ் நிவாரண பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41