21 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

By T Yuwaraj

05 Jun, 2022 | 09:13 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கம் அமைத்திருக்கும் அரசியலமைப்பின் 21 ஆம் திருத்தத்தை நாளை செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அனுமதித்துக்கொள்ள வேண்டும்.

அத்துடன் பாராளுமன்றத்திலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் நிறைவேற்றிக்கொள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்கவேண்டும் என மக்கள் பேரவையின் சர்வமத தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

21 ஆவது திருத்த இறுதி வரைபு தொடர்பில் நாளை விசேட கலந்துரையாடல் - அரசாங்கம்  | Virakesari.lk

அரசியலமைப்பின் 21ஆம் திருத்தம் ஏன் கொண்டுவரப்படவேண்டும் என்ற தொனிபொருளில் மக்கள் பேரவையின் சர்வமத தலைவர்கள் கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவவாறு தெரிலித்தனர்.

இங்கு கருத்து தெரிவித்த ஓமல்பே சோபித்த தேரர் குறிப்பிடுகையில்,

நாடு தற்போது எதிர்கொண்டு பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண விரைவாக பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவேண்டும்.

தற்கு ஆரம்பமாக சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் வகையில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவேண்டும். அதனை இன்னும் செய்ய முடியாமல் போயிருக்கின்றது. அரசியலமைப்பின் ஜனாதிபதியின் அதிகாரம் காரணமாகவே  ஸ்திரமான அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த முடியாமல் இருக்கின்றது. 

அதனால் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து 21ஆம் திருத்தம் விரைவாக அனுமதிக்கப்படவேண்டும். 21ஆம் திருத்தத்தை அரசாங்கம் வரைபு படுத்தி இருக்கின்றது.

அதனை தொடர்ந்தும் தாமதிக்காமல் நாளை இடம்பெறும் அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அனுமதித்துக்கொள்ள வேண்டும். அதேபோன்று பாராளுமன்றத்திலும் அதனை சமர்ப்பித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றிக்கொள்ள அனைவரும் ஆதரவளிக்கவேண்டும்்

குறிப்பாக இரட்டை பிரஜா உரிமை உடையவர்களுக்கு மக்கள் பிரதிநிதியாக முடியாது என்ற திருத்தம் முக்கியமாகும். இரட்டை பிரஜா உரிமை இருப்பவர்கள் ஒருபோதும் எமது நாட்டின் நன்மைக்காக செயற்டப மாட்டார்கள்.

அவர்கள் நாட்டுக்கு விசுவாசமாக இருக்கமாட்டார்கள். அதனால் தனி நபர் ஒருவருக்கா பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்டாமல், நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு 21ஐ ஆதரிக்க வேண்டும். நாட்டின் தற்போதைய நிலைமைக்கு காரணம் அரசியல்வாதிகளாகும். 

அதனால் அரசியல்வாதிகளால் ஏற்பட்ட இந்த நிலைமையை இல்லாமலாக்க, அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த 21ஆம் திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அதன் பாவத்தில் இருந்து அவர்களுக்கு மீள முடியாது என்றார்.

அதனைத்தொடர்ந்து மெளலவி நுஸ்ரான் இங்கு கருத்து தெரிவிக்கையில்,

 நாட்டின் அரசியலமைப்பு 20முறை திருத்தப்பட்டிருக்கின்றது. என்றாலும் மக்கள் இன்னும் வரிசையிலும் பட்டினியிலுமே இருக்கின்றனர். இதனை இல்லாமலாக்கி மக்களின் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காணப்படவேண்டும். அதற்காக அரசியலமைப்பின் 21ஆம் திருத்தம் தற்போது தேவையாகி இருக்கின்றது. அரசியலமைப்பு திருத்தம் மூலம் தனிநபர்களை பாதுகாக்கவும் தங்களின் சுய தேவைகளுக்காகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படக்கூடாது. நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும். 

எனவே அரசாங்கம் தற்போது சமர்ப்பிக்க இருக்கும் 21ஆம் திருத்த்தை விரைவாக அனுமதித்துக்கொள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிக்க வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right