(நெவில் அன்தனி)
அனுபவம் வாய்ந்த வயதான வீரர்களை அதிகம் நம்பி, கடைசி கட்டத்தில் ஏகப்பட்ட கோல்போடும் வாய்ப்புகளைத் தவறவிட்ட சோண்டர்ஸ் கழகம், சுகததாச அரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்ற சொலிட் கழகத்துடனான சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டியை 1 - 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொள்ள நேரிட்டது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 14 கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தின் முதலாம் கட்டத்தில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த முதலாவது போட்டி இதுவாகும்.
வயதான வீரர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் தனது ஆட்டத்தைத் திறமையாக ஆரம்பித்த சோண்டர்ஸ் கழகம் போட்டியின் முதலாவது பகுதியில் ஆதிக்கம் செலுத்தி இடைவேளையின்போது 1 - 0 என்ற கோல் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.
போட்டி ஆரம்பித்ததிலிருந்து கோல் போடுவதற்கு பல தடவைகள் முயற்சித்த சோண்டர்ஸ் போட்டியின் 16ஆவது நிமிடத்தில் 46 வயதுடைய நிரோஷன் கிரிஷான்த அபேசேகர போட்ட கோல் மூலம் முன்னிலை பெற்றது. சுந்தரராஜ் நிரேஷ் பரிமாறிய பந்தையே அபேசேகர கோலாக்கினார்.
இதனைத் தொடர்ந்து கோல் எண்ணிக்கையை அதிகரிக்க சோண்டர்ஸ் வீரர்கள் கடுமையாக முயற்சித்த போதிலும் சொலிட் கழகத்தின் பின்கள வீரர்களும் கோல்காப்பாளரும் அந்த முயற்சிகளை முறியடித்த வண்ணம் இருந்தனர்.
ஆட்டத்தின் முதலாவது பகுதியில் அற்புதமாக விளையாடிய சோண்டர்ஸ் கழகம், இடைவேளைக்குப் பின்னர் கோல் மழை பொழியும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வயதான வீரர்களின் ஆட்ட வேகம் குறைந்ததால் சோண்டர்ஸ் கழகத்தின் இளம் வீரர்களுக்கு விறுவிறுப்புடன் விளையாட முடியமால் போனது.
போட்டியின் 55ஆவது நிமிடத்தில் சொலிட் கழக வீரர் நிஷான்த பரிமாறிய பந்தை சுமார் 25 யார் தொலைவிலிருந்து ஓங்கி உதைத்த சமித் மதுஷன்க அலாதியான கோல் ஒன்றைப் புகுத்தி கோல் நிலையை 1 - 1 என சமப்படுத்தினார். அவர் உதைத்த பந்து மின்னல் வேகத்தில் சென்று வலது கம்பத்தில் பட்டு கோலினுள் புகுந்தது.
இதனைத் தொடர்ந்து ஆட்டத்தில் சூடு பிடிக்கத் தொடங்கியதுடன் சோண்டர்ஸ் வீரர்கள் சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டனர். வயதான வீரர்கள் களைப்புற்றதால் எதிரணியின் வேகத்துக்கு ஈடுகொடுப்பதில் சிரமத்தை எதிர்கொண்டனர். ஆனால், சோண்டர்ஸ் முகாமைத்துவம் வயதான வீரர்களில் அதிகம் நம்பிக்கை கொண்டதால் இறுதியில் அதற்கான பலாபலனை அனுபவிக்க நேரிட்டது.
டிலான் பெரேராவை மாற்றிய 69ஆவது நிமிடத்தில் மாற்றிய பயிற்றுநர் மொஹமத் இம்ரான், மற்றைய 2 வயதான வீரர்களை களைப்புக்கு மத்தியில் 90 நிமிடங்களும் விளையாட வைத்தமை அணிக்கு தாக்கத்தை கொடுத்தது என கால்பந்தாட்ட விமர்சகர்கள் கூறினர்.
இதேவேளை, கோல் போட்ட பின்னர் திறமையாக விளையாடிய சொலிட் கழக வீரர்கள், சோண்டர்ஸ் கோல் எல்லையை ஆக்கிரமித்த போதிலும் போதிய அனுபவம் இன்மை காரணமாக கோல் போடுவதில் கோட்டை விட்டனர்.
மறுபுறத்தின் போட்டியில் கடைசி 10 நிமிடங்களில் வெற்றி கோலை போடுவதற்கு சோண்டர்ஸ் கழகம் எடுத்துக் கொண்ட 7 வாய்ப்புகள் அடுத்தடுத்து தவறிப்போயின.
இறுதியில் போட்டி 1 - 1 என வெற்றிதோல்வியின்றி முடிவடைய சொலிட் கழகம் பெரும் திருப்தியுடன் சொந்த நகருக்கு திரும்பியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM