சுழற் பந்துவீச்சினால் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வென்றது தொடரை

Published By: Raam

30 Oct, 2016 | 09:21 AM
image

அமித் மிஷ்ராவின் அதிரடிப் பந்து வீச்சில் சிக்குண்ட நியூசிலாந்து அணி 23.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்களால் இந்தியாவுடனான ஐந்து ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரை இழந்தது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான 5 ஆவதும், தொடரை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியுமான ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது.

இந்திய நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது. தொடரை தீர்மானிக்கும் இந்த போட்டியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 269 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

சிறப்பாகத் துடுப்பாடிய ரோஹித் சர்மா 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 70 ஓட்டங்களையும் விராட் கொஹ்லி 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கலாக 65 ஓட்டங்களையும் பெற்று இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையிற்கு வலு சேத்தனர்.

270 என்ற ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு, முதல் ஓவரில் மார்டின் கப்டில் உமேஷ் யாதவின் பந்து வீச்சில் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். தொடர்ந்து வந்த நியூசிலாந்து அணி வீரர்களும் ஆட்டமிழந்து செல்ல 23.1 ஓவர்களில் 79 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து நியூசிலாந்து அணி 190 ஓட்டங்களால் தோல்வியுற்றது.

இந்திய அணி சார்பாக அதிரடியாக பந்து வீசிய அமித் மிஷ்ரா 6 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது கன்னிப் போட்டியில் விளையாடிய ஜெயந்த் யாதவ் 4 ஓவர்களுக்கு 8 ஓட்டங்களைக் கொடுத்து 1 விக்கெட்டினைக் கைப்பற்றிக்கொண்டார்.

5 ஆவதும் இறுதிப் போட்டியுமான இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இப்போட்டித் தொடரை 3-2 கணக்கில் வென்றது. அத்துடன் ஆட்ட நாயகன் மற்றும் போட்டித் தொடர் நாயகன் விருதுகளை அமித் மிஷ்ரா பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓரளவு சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு...

2025-03-14 19:29:36
news-image

நிப்புனைத் தொடர்ந்து ரமேஷ் சதம் குவிப்பு;...

2025-03-14 21:49:45
news-image

நியூஸிலாந்தை மண்டியிடச் செய்த அறிமுக வீராங்கனை...

2025-03-14 17:33:10
news-image

நியூட்டனின் சகலதுறை ஆட்டத்தால் 2ஆம் அடுக்கு...

2025-03-14 14:08:12
news-image

அவிஷ்க, கவின், அசலன்க ஆகியோரின் அபார...

2025-03-13 19:45:02
news-image

கண்டி அணிக்கு எதிரான போட்டியில் பலமான...

2025-03-13 19:00:12
news-image

மாதத்தின் சிறந்த வீரர், வீராங்கனை ஐசிசி...

2025-03-13 16:16:47
news-image

நஞ்சிங் உலக மெய்வல்லுநர் உள்ளக அரங்க...

2025-03-14 13:39:02
news-image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: சங்கா சதம்...

2025-03-12 17:16:17
news-image

ஈட்டி எறிதலில் தேசிய சாதனை நிலைநாட்டி...

2025-03-10 18:33:39
news-image

மாளிகாவத்தை யூத்தை அதிரவைத்து 3 -...

2025-03-09 23:17:50
news-image

நியூஸிலாந்தை வீழ்த்தி சம்பியன்ஸ் கிண்ணத்தை இந்தியா...

2025-03-09 23:53:26