அம்பாறையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மற்றும் நகரசபை முதல்வர் உட்பட அவர்களது உறவினர்களது வீடுகளுக்கு தீவைக்கப்பட்ட மற்றும் சேதமாக்கிய சம்பவங்கள் தொடர்பாக பெண்கள் மற்றும் நீதிமன்றத்தில் சரணடைந்த இருவர் உட்பட 33 பேரை இதுவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட விசாரணைக் குழுவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்ட மே 9 திகதி வன்முறை சம்பவத்தையடுத்து அம்பாறையிலுள்ள ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான வீரசிங்க, விமல் திஸாநாயக்க மற்றும் அவரது மகனின் வீடு , அம்பறை நகரசபை முதல்வர் ஆகியோரது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டள.
இச் சம்பவம் தொடர்பாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலமையில் குழு ஒன்றை அமைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் பெண்கள் உட்பட 31 பேரை கைது செய்ததுடன் இருவர் நீதிமன்றில் சரணடைந்துள்ளனர்.
இதில் இதுவரை கைது செய்யப்பட்ட 33 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இவர்கள் பிணையில் வெளிவந்துள்ளதுடன் குறித்த சம்பவத்தில் தீக்கிரையாக்கப்பட்ட மற்றும் சேதமாக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பாக விலை மதீப்பீட்டு திணைக்களத்துக்கு அறிவித்துள்ளதுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணை தொடர்ந்து இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM