கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு நாணயங்களுடன் இந்திய பிரஜை கைது 

Published By: Digital Desk 4

05 Jun, 2022 | 03:53 PM
image

இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினரால் இன்று காலை 1000 ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

45 வயதான இந்திய வர்த்தகரான இவர் இலங்கைக்கு தொழில் நிமித்தமாக வந்திருந்த நிலையில், இன்று அதிகாலை 02.30 மணியளவில் இந்தியாவின் சென்னைக்கு 6E1208 இன் இண்டிகோ விமானத்தில் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

 இதன்போது கட்டுநாயக்க விமான நிலைய இடம்பெயர்வு பயணிகள் முனையத்தில் உள்ள கழிவறைக்கு குறுகிய நேரத்தில் பல தடவைகள் சென்று வந்த நிலையில், அவரது பயணப் பொதிகளுடன் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அவரது பயணப் பொதிகளை சோதனையிட்டதில் 117,000 கனேடிய டாலர்கள் மற்றும் 19,000 யூரோக்கள் ரொக்கமாக இருந்மை கண்டறியப்பட்டுள்ளது.

அவர் எடுத்துச் சென்ற வெளிநாட்டு நாணயங்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதையடுத்து சுங்கத்துறை துணை இயக்குநரால் குறித்த .பயணி எடுத்துச் சென்ற வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்கப்பட்டதுடன்  10,000 ரூபா அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31