பாடசாலை முதலாம் தவணையின் 2 ஆம் கட்ட கல்வி செயற்பாடுகள் இன்று ஆரம்பம்

By Vishnu

05 Jun, 2022 | 03:53 PM
image

(எம்.மனோசித்ரா)

நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் இவ்வாண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன.

இவ்வாண்டுக்கான முதலாம் தவணையில் முதலாம் கட்ட கல்வி செயற்பாடுகள் கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டன.

மே மாதம் 21 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை 2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகள் காரணமாக விடுமுறை வழங்கப்பட்டது.

இந்நிலையிலேயே இன்று மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன.

இன்று ரம்பமாகும் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் ஜூலை 8 ஆம் திகதி வரை இடம்பெறும்.

ஜூலை 9 ஆம் திகதி முதல் ஜூலை 17 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும் என்று கல்வி அமைச்சினால் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாண்டுக்கான இரண்டாம் தவணை கல்வி செயற்பாடுகள் ஜூலை 18 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 16 ஆம் திகதி வரை (இந்த இரு தினங்களும் உட்பட) இடம்பெறும்.

இதே போன்று இவ்வாண்டுக்கான மூன்றாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள் செப்டெம்பர் 19 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை (இந்த இரு தினங்கள் உள்ளடங்கலாக) இடம்பெறும்.

அதற்கமைய ஒக்டோபர் 14 ஆம் திகதி முதல் நவம்பர் 13 ஆம் திகதி வரை இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் காரணமாக விடுமுறை வழங்கப்படும்.

அத்தோடு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகள் நவம்பர் 14 ஆம் திகதி முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரை இடம்பெறும்.

இவ்வாண்டுக்கான உயர்தர பரீட்சைகளை ஒக்டோபரிலும் மற்றும் சாதாரண பரீட்சைகளை 2023 ஆரம்ப பகுதியிலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதோடு , பாடசாலைகளில் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தவணை விடுமுறைகள் மேற்கூறப்பட்ட முறையில் வழங்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சினால் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இந்நிலையில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை ஒக்டோபரில் நடத்தும் தீர்மானம் கலந்துரையாடல் மட்டத்திலேயே  உள்ளதாகவும் , அது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் அண்மையில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38
news-image

2023 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத்...

2022-11-28 19:57:39
news-image

மனித உரிமை விடயத்தில் அரசாங்கம் நழுவிச்செல்லும்...

2022-11-28 19:54:34
news-image

நடுநிலையான வெளிவிவகார கொள்கையை பின்பற்றினால் மாத்திரமே...

2022-11-28 17:02:23