சிலாபம் - புத்தளம் புகையிரத நிலையங்களுக்கிடையில் நாகவில்லுவ பிரசேத்தில் இன்று பகல் வேன் ஒன்று புகையிரதத்துடன் மோதுண்டதில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த  வேனின் சாரதி, வேனினை குறுக்கு வீதியில் செலுத்த முற்பட்ட போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.