ரஷ்ய விமானம் குறித்த பிரச்சினை இரு நாடுகளுக்கிடையிலானதல்ல : இது தனிப்பட்ட சட்ட பிரச்சினை : ரஷ்யாவிற்கு அறிவித்தார் பிரதமர் ரணில்

Published By: Vishnu

05 Jun, 2022 | 12:54 PM
image

(எம்.மனோசித்ரா)

ரஷ்ய விமானம் தொடர்பான பிரச்சினை இரு நாடுகளுக்கிடையிலானது அல்ல என்றும் , அது தனிப்பட்ட சட்ட பிரச்சினையாகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நீதித்துறை அமைச்சின் ஊடாக இது தொடர்பில் ரஷ்ய வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்கு அறிவித்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதைத் தடுக்கும் வகையில் ஏரோஃப்ளோட் விமானத்திற்கு மேல் மாகாண வர்த்தக உயர் நீதிமன்றம் கடந்த 2 ஆம் திகதி தடை உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கு ஐரிஷ் நிறுவனமான செலஸ்டியல் ஏவியேஷன் டிரேடிங் 10 லிமிடெட் வாதியால் முதல் பிரதிவாதியான பொதுக் கூட்டுப் பங்கு நிறுவனமான 'ஏரோஃப்ளோட்' மற்றும் இரண்டாவது பிரதிவாதியான எயார் நேவிகேஷன் மற்றும் இலங்கையின் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள், கட்டுநாயக்கவின் பதில் தலைவர் என்.சி. அபேவர்தன ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வணிகப் பிணக்கு தொடர்பான வழக்கு ஆகும்.

இந்த விடயம் இன்னும் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காக நிலுவையில் உள்ளது. இந்த விடயம் வழக்கமான  தூதரக வழிகளிலும் ஆலோசனையில் உள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றுக்கு அறிக்கை...

2026-06-09 02:05:30
news-image

விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகளின் தேவைகளை...

2026-06-08 12:27:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் :...

2026-06-08 12:29:41
news-image

ஹிஸ்புல்லா பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ்...

2026-06-08 14:00:34
news-image

சுரேஷ் சலேயின் கடந்த கால சேவையைக்...

2026-06-08 15:30:16
news-image

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பாதுகாக்க முன்னின்ற...

2026-06-08 14:01:15
news-image

சுரேஷ் சலேவை விடுவிக்கக் கோரி சத்தியாகிரக...

2026-06-08 16:09:10
news-image

அரசியலுக்குப் பலிகொடுக்க மாட்டேன்; இராணுவத்திற்கு பிள்ளைகளை...

2026-06-08 16:02:06
news-image

கரப்பான் பூச்சி, எலியைக் கண்டால் நடுங்கும்...

2026-06-08 17:34:53
news-image

உடல்நிலை மோசம்; உயில் எழுதத் தயார்:...

2026-06-08 17:25:22
news-image

டொலர் உயர்வால் மக்கள் மீதே கடன்...

2026-06-08 20:38:26
news-image

செம்மணி புதைகுழி அகழ்வில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள்...

2026-06-08 19:24:40