மண்ணெண்ணெய் விநியோகம் : அட்டனில் அமைதியின்மை

Published By: Vishnu

05 Jun, 2022 | 12:06 PM
image

அட்டனில் நேற்று 04 ஆம் திகதி மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெற்றதால், நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த மக்கள் ஆத்திரமடைந்தனர். கடும் வாக்குவாதங்களிலும் ஈடுபட்டனர். இதனால் பெரும் அமைதியின்மை ஏற்பட்டது.

நீண்ட நாட்களுக்கு பின்னர் அட்டனில் நேற்று மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெற்றது. மண்ணெண்ணெய் பெறுவதற்காக அதிகாலை முதலே மக்கள் வரிசைகளில் அணிவகுத்து நின்றனர்.

பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

மண்ணெண்ணெய் பெறுவதற்கு வரிசையில் நின்றவர்களுக்கு ஆரம்பத்தில் தலா மூன்று லீற்றர் வீதம் வழங்கப்பட்டது. வரிசை நீண்டதால் பின்னர் அது இரண்டு லீற்றராக மட்டுப்படுத்தப்பட்டது. மாலையானதும் மண்ணெண்ணெய் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் வரிசையில் நின்றவர்கள் ஆத்திரமடைந்தனர். பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் எரிபொருள் நிலைய பணியாளர்களுடன்  மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

வேலையை இழந்துவிட்டே வரிசையில் நின்றோம். மண்ணெண்ணெய் இல்லாது எப்படி செல்வது? நாளையும் வரிசைக்கு வர வேண்டுமா என மக்கள் சீற்றம் வெளியிட்டனர்.

கூப்பன் முறையை அறிமுகப்படுத்தியாவது, முறையாக மண்ணெண்ணெய் வழங்குமாறு அழுத்தம் கொடுத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட  காணிகளை விடுவிக்க முடியுமா?...

2025-03-25 19:14:12
news-image

தேர்தலில் அரசாங்கத்தின் வாக்குகள் சிதறப் போகின்றன...

2025-03-25 17:05:57
news-image

தேர்தலுக்காக பொய் கூறும் அரசாங்கத்துக்கு மக்கள்...

2025-03-25 17:06:50
news-image

இலங்கை - சீன நட்புறவு என்றும்...

2025-03-25 18:26:23
news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு விளக்கமறியல் 

2025-03-25 18:22:02
news-image

"சிவாகம கலாநிதி" தானு மஹாதேவ குருக்களின்...

2025-03-25 18:49:33
news-image

காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்த திட்ட...

2025-03-25 18:33:35
news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!

2025-03-25 17:31:19
news-image

மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ். மாவட்ட...

2025-03-25 18:53:59
news-image

நால்வர் மீதான தடை குறித்த பிரித்தானிய...

2025-03-25 17:40:02
news-image

செங்கலடியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து...

2025-03-25 17:09:47
news-image

முச்சக்கரவண்டியிலிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுப்பு :...

2025-03-25 17:04:04