இலங்கைக்கு மேலும் உதவிகளை வழங்கத்தயார் : தமிழக முதல்வர் ஸ்டாலின் இலங்கை உயர்ஸ்தானிகரிடம் உறுதி

04 Jun, 2022 | 07:28 PM
image

(நா.தனுஜா)

இலங்கையின் தற்போதைய நிலை குறித்து தான் கவலையடைவதாகவும், இலங்கை மக்களுக்கு அவசியமான அத்தியாவசியப்பொருட்களை மேலும் வழங்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொடவிடம் உறுதியளித்துள்ளார்.

தமிழக முதமைச்சர் எம்.கே.ஸ்டாலின் மற்றும் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொட ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று சனிக்கிழமை (4) சென்னையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றது. 

கடந்த 2011 ஆம் ஆண்டின் பின்னர் புதுடில்லியில் இருக்கின்ற இலங்கை உயர்ஸ்தானிகர் தமிழக முதலமைச்சரை சந்திக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். 

'இந்திய, இலங்கை தூதரகங்களுக்கான ஒன்றிணைந்த தேசிய உத்தி' என்ற கொள்கை செயற்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கான திட்டத்தின் ஓரங்கமாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றது.

 இதன்போது இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதனைக் கையாள்வதற்கு 2 பில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகளை வழங்கியமைக்காக உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தமிழக முதலமைச்சருக்கும், தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். 

அதற்குப் பதிலளித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், இலங்கையின் தற்போதைய நிலை குறித்து தான் கவலையடைவதாகவும் அத்தியாவசியப்பொருட்களைக் கப்பலில் ஏற்றி, இலங்கைக்கு உடனடியாக அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்தியாவசியப்பொருட்கள் ஏற்றப்பட்ட இரண்டாவது கப்பல் அனுப்பிவைக்கப்படுவதற்குத் தயார்நிலையில் இருப்பதாகவும், மேலும் சில கப்பல்களை அனுப்பிவைப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 இச்சந்திப்பின்போது இலங்கை மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றுக்கு இடையில் நிலவும் மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. 

இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் காணப்படுகின்ற புராதன காலத்தொடர்புகள், கலாசார மற்றும் பாரம்பரிய ஒருமைப்பாடுகள் மற்றும் அவற்றை மேலும் வலுப்படுத்தல் ஆகிய விடயங்கள் குறித்தும் இருதரப்பினரும் கலந்துரையாடினர். 

இதுகுறித்து கருத்து வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்மொழியியல் ரீதியில் மிகவும் புகழ்பூத்த திருவள்ளுவரின் உருவச்சிலையைப் பல்கலைக்கழகங்கள் போன்ற பொருத்தமான இடங்களில் நிறுவுவதற்கு இலங்கை விருப்பம் காண்பிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். அதனை ஏற்றுக்கொண்ட உயர்ஸ்தானிகர், அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வதாக உறுதியளித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

51/1 தீர்மானத்தின் ஊடாக உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு...

2024-09-18 03:01:51
news-image

புதிய ஜனாதிபதி இன நல்லிணக்கத்துக்கு முன்னுரிமை...

2024-09-18 02:04:31
news-image

நாட்டை இருண்ட யுகத்திற்குள் தள்ளாது, நாட்டின்...

2024-09-18 00:57:43
news-image

நாட்டை அபிவிருத்தி செய்வதா? அராஜக நிலைக்கு...

2024-09-17 21:34:58
news-image

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர் நியமன...

2024-09-17 21:05:09
news-image

வாய்ப்புக் கேட்கும் அரசியல்வாதிகளிடம் நாட்டை ஒப்படைத்து...

2024-09-17 22:49:09
news-image

மஹிந்த ராஜபக்ஷவுக்கு உண்மையில் நாட்டு பற்று...

2024-09-17 21:02:10
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களுக்கு ஐக்கிய...

2024-09-17 20:55:29
news-image

நோயாளி குணமடைந்து வரும் நிலையில் வைத்தியரை...

2024-09-17 21:26:06
news-image

தோற்பவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் வெற்றியைக் கொண்டாடுங்கள்...

2024-09-17 20:20:29
news-image

அரச சொத்துக்களை கொள்ளையடிக்கவில்லை ; நாட்டுக்கு...

2024-09-17 20:15:17
news-image

சட்டவிரோத மதுபான கடத்தலில் ஈடுபட்டவர் கைது...

2024-09-17 20:17:23