(எம்.வை.எம்.சியாம்)
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி கோதுமை மாவை ஏற்றிச் சென்ற ரயிலில் இன்று அதிகாலை மோதுண்டு தலபத் கந்த புகையிரத நிலையத்திற்கு அருகில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு யானை காயமடைந்துள்ளதாகவும் கல்ஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது காட்டு யானைகளால் ஏற்பட்ட விபத்தினால் ரயில் தடம் புரண்டதுடன் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக கொழும்பில் இருந்து மட்டக்களப்பு வரையிலான புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டு இருந்ததாகவும் புகையிரத திணைக்களம் தெரிவித்திருந்தது.
விபத்தில் 4 வயதுடைய யானை ஒன்றும் ஒரு வயது குட்டி யானையும் ஒன்றும் உயிரிழந்துள்ளதுடன் 15 வயதுடைய மற்றொரு யானை படுகாயமடைந்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கல்ஓயா காட்டில் இருந்து அதிக எண்ணிக்கையிலான காட்டு யானைகள் குடிநீருக்காக இப்பகுதிக்கு அடிக்கடி வந்து செல்கின்றன.
இதன் போதே ஏராளமான காட்டு யானைகள் ரயிலில் அடிபட்டு இறப்பதாகவும் இதற்கு முன்னரும் இவ்வாறு பலமுறை விபத்து சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM