மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: திமுக, அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

Published By: Digital Desk 5

04 Jun, 2022 | 03:37 PM
image

தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆறு வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகினர்.

தமிழகத்தில் காலியாக இருக்கும் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிக்கையை வெளியிட்டது. 

இதன்படி வேட்புமனு தாக்கல் மே மாதம் 24ஆம் திகதியன்று தொடங்கியது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் மாதம் 1ஆம் திகதி அன்று நடைபெற்றது. வேட்புமனுக்களை திரும்பப் பெற வெள்ளிக்கிழமையான நேற்று கடைசி நாளாகும்.

மேலும் இது தொடர்பாக. தமிழக தேர்தல் அதிகாரியும், தமிழக சட்டப்பேரவை செயலாளர் நாயகமுமான சீனிவாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது...

'' திமுகவை சேர்ந்த சு. கல்யாணசுந்தரம்,  இரா. கிரிராஜன், கே. ஆர். என். ராஜேஷ்குமார், அதிமுகவைச் சேர்ந்த சி. வி. சண்முகம், ஆர். தர்மர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப. சிதம்பரம் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.'' என்றார்.

வெற்றிபெற்ற திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்தும், ஆசியும் பெற்றனர். 

இதனைத் தொடர்ந்து திமுக மாநிலஙகளவை உறுப்பினர்கள், கட்சியில் வளரும் இளந்தலைவரான உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்து ஆசி பெற்றனர். 

அதிமுகவில் சார்பில் போட்டியிட்ட வெற்றிபெற்றவர்கள் அதிமுகவின் இரட்டை தலைமைகளாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது...

2026-07-22 16:20:06
news-image

டெல்லியில் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”யினரால்...

2026-07-22 16:33:45
news-image

டெல்லி போராட்டம் : கைது செய்யப்பட்ட...

2026-07-22 11:57:27
news-image

அசாமில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ; கடந்த...

2026-07-22 11:13:45
news-image

Godzilla vs. Kong திரைப்படப் புகழ்...

2026-07-22 11:02:41
news-image

புதுடெல்லியில் பரபரப்பு: பிரதமர் மோடி இல்லம்...

2026-07-22 09:39:58
news-image

இந்தியாவில் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து:...

2026-07-21 17:00:50
news-image

15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்களை...

2026-07-21 15:50:13
news-image

கயானா படகு விபத்து; 27 பேரின்...

2026-07-21 11:41:07
news-image

கிழக்கு ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளப்பெருக்கு; 20...

2026-07-21 10:34:42
news-image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் -...

2026-07-21 10:32:37
news-image

வியட்நாமில் நடுவீதியில் தீப்பற்றி எரிந்த பஸ்...

2026-07-21 10:17:03