வவுனியாவில் தமிழக அரசினால் வழங்கப்பட்ட பொதிகள் வவுனியா தாண்டிக்குளத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
தமிழக அரசினால் வழங்கப்பட்ட உதவி பொருட்கள் கடந்த 02ம் திகதி வவுனியாவிற்கு புகையிரதம் மூலமாக வந்தடைந்ததையடுத்து, மாவட்டத்தில் உள்ள 102 கிராம சேவகர் பிரிவுகளிற்கு குறித்த பொருட்கள் பிரித்து வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றையதினம் தொடக்கம் பல்வேறு கிராம சேவகர் பிரிவுகளில் இந்திய உணவு பொருட்களினை வசதியற்ற மக்களிற்கு வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இன்றையதினம் வவுனியா தாண்டிக்குளம் கிராம சேவகர் அலுவலகத்தில் குறித்த செயற்திட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
தாண்டிக்குளம் கிராம சேவகர் பிரிவில் உள்ள வசதியற்ற 295 பேருக்கு 10 கிலோ கிராம் அரிசி பை வீதம் கிராம சேவகர் சி.ரவீந்திரன் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஸ்ரீ.கீதாஞ்சலி ஆகியோரால் வழங்கப்பட்டது.
இதேவேளை தமிழக அரசினால் வழங்கப்பட்ட உதவி பொருட்கள் மூலமாக வவுனியா மாவட்டத்தில் 22,250 குடும்பங்கள் பயனடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM