முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி ; ஐவர் காயம்

By Digital Desk 5

04 Jun, 2022 | 02:08 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

தனமல்வில பகுதியில் ஒன்பது பேருடன் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (04) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தனமல்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் 20 ஆவது கட்டைப் பகுதியில் உடவளவயிருந்து தனமல்வில நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கர வண்டியின் பயணித்த பயணி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 46 வயதுடைய இங்குருகடுவ, பஸ்ஸர பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

விபத்தின் போது ஓட்டுநர் உட்பட 4 பயணிகள் காயமடைந்து தனமல்வில மற்றும் ஹென்னியத்த வைத்தியசாலைகளில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right