ரஸ்யாவின் விமானம் தடுத்துவைக்கப்பட்டுள்ள விவகாரம் - இலங்கை தூதுவரை நேரில் அழைத்து ரஸ்ய வெளிவிவகார அமைச்சு கண்டனம்

Published By: Rajeeban

04 Jun, 2022 | 10:49 AM
image

ரஸ்யாவின் ஏரோஃப்ளோட் விமானத்தினை இலங்கை தடுத்துவைத்துள்ளமை குறித்து  ரஸ்ய வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

ரஸ்யாவிற்கான இலங்கை  தூதுவர் ஜனித்த அபயவிக்கிரம லியனகேயை நேரில் அழைத்து ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ஜூன் மூன்றாம் திகதி ரஸ்யாவிற்கான இலங்கை தூதுவர்  வெளிவிவகார அமைச்சிற்கு நேரில் அழைக்கப்பட்டார் என ரஸ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜூன் இரண்டாம் திகதி ரஸ்யாவின் ஏரோஃப்ளோட் விமானத்தை கொழும்பு சர்வதேச விமானநிலையத்தில் தடுத்து வைத்திருக்கவேண்டும் என நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு குறித்து இலங்கை தூதுவரிடம் வெளிவிவகார அமைச்சு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது

இரு நாடுகளிற்கும் இடையிலான பாரம்பரிய நல்லுறவிற்கு பாதிப்பு ஏற்படுவதைதவிர்ப்பதற்காக  இந்த விவகாரத்திற்கு உடனடியாக தீர்வை காணுமாறு இலங்கை அதிகாரிகளை கேட்டுக்கொண்டோம் என ரஸ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையுடனான கடன்மறுசீரமைப்பு ; 7பில்லின் டொலர்கள்...

2025-03-15 18:15:27
news-image

சீனாவுக்கான இராஜதந்திர பயணத்தில் பல்வேறு வெற்றி...

2025-03-15 18:17:43
news-image

ரணில் - சஜித் இணையும் வரை...

2025-03-15 18:58:16
news-image

இன்றைய வானிலை

2025-03-16 06:32:14
news-image

படையினரால் வன்கொடுமைக்குள்ளான தமிழ் பெண்களுக்கு நீதி...

2025-03-15 18:19:12
news-image

இந்தியப் பிரதமர் மோடி ஏப்ரல் முதல்...

2025-03-15 17:14:14
news-image

ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமை பறிக்கப்படுமா ?...

2025-03-15 18:57:17
news-image

ரணில் தம்பதியினரின் லண்டன் விஜயத்துக்கு 160...

2025-03-15 17:06:12
news-image

அநுர அரசாங்கமும் வேறுபடவில்லை : ஹக்கீம்

2025-03-15 17:09:04
news-image

அரசின் உள்ளகப்பொறிமுறை தீர்மானம் வெட்கக்கேடானது :...

2025-03-15 18:22:55
news-image

மிலேச்சத்தனமான கொலைகளால் மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்...

2025-03-15 18:20:59
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கொலை,...

2025-03-15 17:42:58