லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

By T. Saranya

04 Jun, 2022 | 10:17 AM
image

கையிருப்பில் உள்ள சமையல் எரிவாயு கொள்கலன்களின் விநியோகம் நேற்றுடன் முடிவடைந்துள்ளதாகவும் மறு அறிவித்தல் வரும்வரை சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் நிறுத்தப்படுவதாகவும்  லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் சமையல் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக, வரிசைகளில் காத்திருக்க வேண்டாம்  என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டுக்கு வருகை தரும் என்றும் அதன் பின்னர் எரிவாயு விநியோகம் வழமைபோன்று இடம்பெறும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் பல இடங்களில் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசைகளில் நிற்பதையும் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் ஆர்ப்பாட்டங்ளில் ஈடுபடுவதையும் தற்போதும் அவதானிக்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right