பிரதமர் ரணில் தலைமையில் கட்சி தலைவர் கூட்டம் - 4 பிரதான விடயங்கள் குறித்து ஒருமித்த இணக்கப்பாடு 

By T Yuwaraj

03 Jun, 2022 | 10:17 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உத்தேச அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூல வரைபில் இரட்டை குடியுரிமை விவகாரம், பிரதமர் பதவி நீக்கம், அமைச்சின் விடயதானங்கள், ஜனாதிபதி அமைச்சு பதவி வகித்தல் உள்ளிட்ட  நான்கு பிரதான விடயங்கள் குறித்து ஒருமித்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. திருத்தங்களுடனான முழுமையான சட்டமூல வரைபினை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெள்ளிக்கிழமை (3) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை பூரணமற்ற வகையில் கொண்டு வராமல் தமிழர் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வினை உள்ளடக்கிய வகையில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை முழுiமையாக இரத்து செய்து அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை மீள  அமுல்படுத்துவதற்கு சகல அரசியல் கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதால் 21ஆவது திருத்தம் தொடர்பில் அவதானம் செலுத்துவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டதை தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபில் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் அடிப்படை இலட்சினங்கள் உள்வாங்கப்படவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூல வரைபு தொடர்பில் சகல கட்சிகளும் முன்வைத்துள்ள திருத்த யோசனைகள் குறித்து கலந்துரையாடுவது அவசியமாகும் என நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ கட்சி தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் மற்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோர் கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.திருத்தம் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் நிலைப்பாட்டை கோரிய போது,பிரதமர் எமது தரப்பு நிலைப்பாட்டை குறிப்பிடுவார் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நீதியமைச்சர் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவையில் சமர்ப்பித்த 21ஆவது திருத்தச்சட்டமூல வரைபில் உள்ளடக்கப்பட்ட விடயங்களில் ஒரு சிலவற்றை திருத்தம் செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் யோசனைகளை முன்வைத்திருந்தனர்.அந்த யோசனைகள் பரிசீலனை செய்யப்பட்டு இழுபறி நிலையில் இருந்து நான்கு பிரதான விடயங்களுக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இரட்டை குடியுரிமையுடைய நபர் இலங்கை பாராளுமன்றில் உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என்ற யோசனையை திருத்தங்களின்றி செயற்படுத்தவும்,ஜனாதிபதி பாராளுமன்றத்தின் அனுமதியுடன் பிரதமரை பதவி நீக்க வேண்டும் என்ற திருத்த யோசனையையும்,

அத்துடன் அமைச்சரவையின் விடயதானங்கள் வேறாக்கத்தின் போது ஜனாதிபதி பரிந்துரைக்கு அமைய செயற்பட வேண்டும் எனவும் (தற்போதைய பாராளுமன்றத்தில் ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனைக்கமைய செயற்பட வேண்டும்,10ஆவது பாராளுமன்றில் அமைச்சரவை விவகாரத்தில் ஜனாதிபதி பிரதமரின் பரிந்துரைக்கமைய செயற்பட வேண்டும்) ,

தற்போதைய 9ஆவது பாராளுமன்றம் செயற்பாட்டில் உள்ள நிலையில் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சினை மாத்திரம் வகிக்க முடியும்,அடுத்த பாராளுமன்றம் அமுலில் உள்ள போது ஜனாதிபதி எந்த அமைச்சினையும் வகிக்க கூடாது என்ற யோசனைகளுக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் பாராளுமன்றில் சமர்ப்பித்த 21ஆவது திருத்த யோசனை தொடர்பில் உயர்நீதிமன்றின் தீர்ப்பினை கருத்திற்கொள்ளவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

நீதியமைச்சர் சமர்ப்பித்த 21ஆவது திருத்த வரைபு தொடர்பில் அரசியல் கட்சிகள் முன்வைத்த யோசனைகளில் பெரும்பாலானவை குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.மக்கள் வாக்கெடுப்பிற்கு செல்லாத விடயங்களை செயற்படுத்த அவதானம் எட்டப்பட்டுள்ளது.அதற்கமைய திருத்தங்களுடனான முழுமையாக திருத்தச்சட்டமூல வரைபு எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு ஓரிரு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பிரதமர் தலைமையில் இடம் பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார,எரான் விக்கிரமரத்ன, தலதா அதுகோரல,திகாம்பரம்,ரவூப் ஹக்கீம்,ரிஷாட் பதியுதீன்,மனோகனேஷன் ஆகியோரும்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும்,சுயாதீன கட்சி சார்பில் அத்துரலியே ரத்ன தேரர்,அனுர பிரியதர்ஷன யாப்பா,ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் தயாசிறி ஜயசேகர,நிமல் சிறிபால டி சில்வா,பைஸர் முஸ்தபாவும்,இலங்கை தொழிலாளர் காங்கிரஷ் சார்பில் செந்தி;ல் தொண்டமான் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

உத்தேச அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூல வரைபில் இரட்டை குடியுரிமை விவகாரம்,பிரதமர் பதவி நீக்கம்,அமைச்சின் விடயதானங்கள்,ஜனாதிபதி அமைச்சு பதவி வகித்தல் உள்ளிட்ட  நான்கு பிரதான விடயங்கள் குறித்து ஒருமித்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.திருத்தங்களுடனான முழுமையான சட்டமூல வரைபினை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை பூரணமற்ற வகையில் கொண்டு வராமல் தமிழர் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வினை உள்ளடக்கிய வகையில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை முழுiமையாக இரத்து செய்து அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை மீள  அமுல்படுத்துவதற்கு சகல அரசியல் கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதால் 21ஆவது திருத்தம் தொடர்பில் அவதானம் செலுத்துவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டதை தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபில் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் அடிப்படை இலட்சினங்கள் உள்வாங்கப்படவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூல வரைபு தொடர்பில் சகல கட்சிகளும் முன்வைத்துள்ள திருத்த யோசனைகள் குறித்து கலந்துரையாடுவது அவசியமாகும் என நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ கட்சி தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் மற்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோர் கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.திருத்தம் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் நிலைப்பாட்டை கோரிய போது,பிரதமர் எமது தரப்பு நிலைப்பாட்டை குறிப்பிடுவார் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நீதியமைச்சர் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவையில் சமர்ப்பித்த 21ஆவது திருத்தச்சட்டமூல வரைபில் உள்ளடக்கப்பட்ட விடயங்களில் ஒரு சிலவற்றை திருத்தம் செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் யோசனைகளை முன்வைத்திருந்தனர்.அந்த யோசனைகள் பரிசீலனை செய்யப்பட்டு இழுபறி நிலையில் இருந்து நான்கு பிரதான விடயங்களுக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இரட்டை குடியுரிமையுடைய நபர் இலங்கை பாராளுமன்றில் உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என்ற யோசனையை திருத்தங்களின்றி செயற்படுத்தவும்,ஜனாதிபதி பாராளுமன்றத்தின் அனுமதியுடன் பிரதமரை பதவி நீக்க வேண்டும் என்ற திருத்த யோசனையையும்,

அத்துடன் அமைச்சரவையின் விடயதானங்கள் வேறாக்கத்தின் போது ஜனாதிபதி பரிந்துரைக்கு அமைய செயற்பட வேண்டும் எனவும் (தற்போதைய பாராளுமன்றத்தில் ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனைக்கமைய செயற்பட வேண்டும்,10ஆவது பாராளுமன்றில் அமைச்சரவை விவகாரத்தில் ஜனாதிபதி பிரதமரின் பரிந்துரைக்கமைய செயற்பட வேண்டும்) ,

தற்போதைய 9ஆவது பாராளுமன்றம் செயற்பாட்டில் உள்ள நிலையில் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சினை மாத்திரம் வகிக்க முடியும்,அடுத்த பாராளுமன்றம் அமுலில் உள்ள போது ஜனாதிபதி எந்த அமைச்சினையும் வகிக்க கூடாது என்ற யோசனைகளுக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் பாராளுமன்றில் சமர்ப்பித்த 21ஆவது திருத்த யோசனை தொடர்பில் உயர்நீதிமன்றின் தீர்ப்பினை கருத்திற்கொள்ளவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

நீதியமைச்சர் சமர்ப்பித்த 21ஆவது திருத்த வரைபு தொடர்பில் அரசியல் கட்சிகள் முன்வைத்த யோசனைகளில் பெரும்பாலானவை குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.மக்கள் வாக்கெடுப்பிற்கு செல்லாத விடயங்களை செயற்படுத்த அவதானம் எட்டப்பட்டுள்ளது.அதற்கமைய திருத்தங்களுடனான முழுமையாக திருத்தச்சட்டமூல வரைபு எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு ஓரிரு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பிரதமர் தலைமையில் இடம் பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார,எரான் விக்கிரமரத்ன, தலதா அதுகோரல,திகாம்பரம்,ரவூப் ஹக்கீம்,ரிஷாட் பதியுதீன்,மனோகனேஷன் ஆகியோரும்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும்,சுயாதீன கட்சி சார்பில் அத்துரலியே ரத்ன தேரர்,அனுர பிரியதர்ஷன யாப்பா,ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் தயாசிறி ஜயசேகர,நிமல் சிறிபால டி சில்வா,பைஸர் முஸ்தபாவும்,இலங்கை தொழிலாளர் காங்கிரஷ் சார்பில் செந்தி;ல் தொண்டமான் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்கள் தங்கள் அடையாளம் சுயமரியாதையை...

2022-12-02 16:44:44
news-image

கபூரியா மத்ரஸா விவகாரம் : 'வக்பு'...

2022-12-02 16:51:09
news-image

பல்கலைக்கழகத்திற்கு 44,000 மாணவர்களை உள்வாங்க நடவடிக்கை...

2022-12-02 16:18:11
news-image

ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மத்தியில்...

2022-12-02 15:20:16
news-image

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின!

2022-12-02 14:57:28
news-image

ஒதியமலை படுகொலையின் 38 ஆவது நினைவேந்தல்...

2022-12-02 15:21:09
news-image

பொல்பித்திகமவில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை !

2022-12-02 14:45:00
news-image

பன்னலயில் பாடசாலை மாணவியிடம் கருத்தடை மாத்திரைகள்...

2022-12-02 14:33:00
news-image

15 வயதான மாணவி பாலியல் துஷ்பிரயோகம்...

2022-12-02 13:44:58
news-image

விபசார நடவடிக்கைக்காக ஓமானுக்கு இலங்கைப் பெண்கள்...

2022-12-02 13:39:28
news-image

பாராளுமன்றத்தில் தேவையற்ற பேச்சுக்களை பேசி நேரத்தை...

2022-12-02 14:51:46
news-image

10 மாதங்களில் 12,000 சமூக ஊடகங்கள்...

2022-12-02 13:28:32