பிரித்தானிய எலிஸபெத் மகாராணியார் ஆட்சிப் பொறுப்பையேற்று 70 வருடங்களாவதைக் குறிக்கும் வகையிலான 4 நாட்கள் வைபவம் அந்நாட்டில் விமரிசையாக இடம்பெற்று வருகிறது.
மகாராணியாரின் வயோதிப நிலை காரணமாக அவரது உடல்நலம் குறித்துக் கவலை எழுந்துள்ள நிலையில், அவர் உடல் நலக் குறைவால் இன்று வெள்ளிக்கிழமை சென் போல் தேவாலயத்தில் தனது ஆண்டு விழாவையொட்டி இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
மகாராணியார்; முதல் நாள் தனது ஆண்டு விழாவையொட்டி இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியை அரண்மனை மாடத்திலிருந்து கண்டுகளித்துக் கொண்டிருந்த போது அவர் உடல் நலம் தொடர்பான அசௌகரியத்தை உணர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மகாராணியார் இன்று தனது சேவைக்கு நன்றி செலுத்தும் முகமாக தேவாலயத்தில் இடம்பெற்ற ஆராதனை நிகழ்வை தொலைக்காட்சியில் கண்டுகளித்தார்.
மேற்படி ஆராதனை நிகழ்வில் மகாராணியாரை உத்தியோகபூர்வமாகப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இளவரசர் சார்ள்ஸ் கலந்துகொண்டிருந்தார்.
இந்த ஆண்டு விழாவில் அரச குடும்பத்திலிருந்து பிரிந்து வாழும் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மெகானும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவரும் அரச குடும்ப வைபவத்தில் பங்கேற்பது இரண்டு வருடங்களுக்குப் பின்னர் இதுவே முதல் தடவையாகும்.
இராணுவ அணிவகுப்பை மாடி மாடத்திலிருந்து கண்டுகளிக்கும் நிகழ்வில் மகாராணியாருடன் இணைந்து பங்கேற்ற உயர் மட்ட அரச குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் இளவரசர் ஹரியும் மெகானும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் அடுத்த மட்டத்திலுள்ள அரச குடும்ப உறுப்பினர்கள் சகிதம் இருந்து இந்த நிகழ்வைக் கண்டுகளித்தனர்.
அதேசமயம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தேவாலய ஆராதனை நிகழ்விலும் இளவரசர் ஹரியும் மெகானும் பின்வரிசையில் அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM