பொலிஸாரால் தேடப்படுகிறார் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன்

Published By: Digital Desk 4

03 Jun, 2022 | 10:06 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

மைனா கோ கம,கோட்டா கோ கம மீதான அரசாங்க ஆதரவாளர்களின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்பிலான விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவரைக் கைது செய்ய இரு சி.ஐ.டி. குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.   

சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காவிந்த பியசேகரவின் நேரடி கட்டுப்பாட்டில், உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ்  இந்த இரு  சி.ஐ.டி. குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும்,  அக்குழுக்கள் குருணாகல் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஜோன்ஸ்டனை கைது செய்யும் நடவடிக்கைகளுக்காக சென்றுள்ள போதும், வெள்ளிக்கிழமை ( 3) மாலை வரை அவரைக் கைது செய்ய முடியவில்லை எனவும்  அந்த தகவல்கள் தெரிவித்தன.

கடந்த மே 09ஆம் திகதி அலரிமாளிகையில் ஒன்றுகூடிய அரசாங்கம் ஆதரவாளர்கள் இடையே முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆவேசமாக உரையாற்றியிருந்தார்.

அந்த உரையை விசாரணை அதிகாரிகள் பிரபல உளவள நிபுணர்களான நீல் பெர்னாண்டோ, குணதாஸ பெரேரா ஆகியோருக்கு செவிமெடுக்க செய்து விசேட அறிக்கையொன்றினை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த உரையடங்கிய இறுவட்டை அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி அறிக்கை பெற அனுமதி  பெறப்பட்டுள்ளது.

 இவ்வாறான நிலையில், குறித்த தாக்குதல்களில் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக உள்ள சாட்சியங்கள் பிரகாரம், அவரைக் கைது செய்ய சி.ஐ.டி.யினர்  தீர்மானித்துள்ள நிலையிலேயே, அது குறித்து நீதிமன்றுக்கும் அறிவிக்கப்பட்டு, தற்போது அவர் தேடப்பட்டு வருகின்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டு சிகரட்டுகள், மதுபான போத்தல்களுடன் இந்திய...

2025-03-24 16:58:37
news-image

யாழில் வீடொன்றில் திருடி மதுபானம் வாங்கிய...

2025-03-24 16:42:32
news-image

இந்திய இராணுவத்தால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட...

2025-03-24 16:34:24
news-image

யாழ். சுழிபுரத்தில் கசிப்பு விற்றவர் கைது

2025-03-24 16:39:03
news-image

சிறுவர் பராமரிப்பு மத்திய நிலையத்திலிருந்து இரு...

2025-03-24 16:33:15
news-image

மட்டக்களப்பு - கொழும்புக்கு இடையிலான ரயில்...

2025-03-24 16:24:17
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் ;...

2025-03-24 16:18:26
news-image

தையிட்டியில் சட்டவிரோத கட்டடத்தை திறந்துவைத்த வட...

2025-03-24 16:06:47
news-image

இலங்கையில் எலான் மஸ்கின் “ஸ்டார்லிங்க்” இணைய...

2025-03-24 15:44:19
news-image

மேர்வின் சில்வா உட்பட மூவரின் விளக்கமறியல்...

2025-03-24 15:45:50
news-image

யாழில் ஆசிரியரை தாக்கிய நிதி நிறுவன...

2025-03-24 15:41:21
news-image

மன்னார் பெண் தொழில்முனைவோருக்கு ஜப்பான் மற்றும் ...

2025-03-24 15:10:30