மொரட்டுவை பல்கலைக்கழக வளாகத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் வளாகத்திலிருந்த மாமரமொன்றின் கீழிருந்து மீட்கப்படடுள்ளதாகவும் குறித்த நபர் மாமரத்திலிருந்து வீழ்ந்து இறந்திருக்கலாம் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 43 வயதுடைய நபரென தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.