டீசலை வைத்திருந்த குற்றச்சாட்டில் புத்தளம் நகரசபை உறுப்பினர் கைது

By Digital Desk 5

03 Jun, 2022 | 03:28 PM
image

அனுமதிப்பத்திரமின்றி வீட்டில் மறைத்து வைத்திருந்த 215 லீற்றர் டீசல் எரிபொருளுடன் பொதுஜனபெரமுனவின் புத்தளம் நகரசபை உறுப்பினர் மொஹான் துமிந்த பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

புத்தளம் பொலிஸாருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய அவரது வீட்டில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டபோது குறித்த டீசல் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட டீசல் எரிபொருளையும் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரையும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் தொடர்ந்தும்மேற்கொண்டு வருகின்றனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right