சமையல் எரிவாயுக்காக காத்திருந்து ஏமாற்றத்துடன் வெறுங்கையுடன் வீடு திரும்பிய மக்கள்

Published By: Digital Desk 4

03 Jun, 2022 | 01:36 PM
image

திருகோணமலை முள்ளிப்பொத்தானை பகுதியில் இன்று (03) சமையல் எரிவாயுக்காக அதிகாலை 4 மணி முதல் காத்திருந்த போதும் எரிவாயு வாகனமே அங்கு வராமையினால் வெறுங்கையுடன் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பல மணி நேரம் காத்திருந்த போதும் எரிவாயு கிடைக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்து வீடு சென்றுள்ளனர். வேகாத வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் அதிகாலை முதல் மதியம் 12.30 மணி வரை காத்திருந்த தாய்மார்கள், வயோதிபர்கள் பெரும் கவலையுடன் வீடு திரும்பினர். 

சமையல் எரிவாயு குறித்த பகுதிக்கு கிடைக்கப் பெற்று மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில் மீண்டும் ஏமாற்றமடைந்துள்ளதாக கவலை வெளியிடுகின்றனர். 

முள்ளிப்பொத்தானை எரிபொருள் நிரப்பு நிலையத்தை அண்டிய பகுதியில் கண்டி திருகோணமலை பிரதான வீதியின் அருகேயும் மிக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் எரிவாயு கிடைக்காமல் வீடு திரும்பியதாகவும் முச்சக்கர வண்டிக்கு பணம் கொடுத்து பல கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 

வீட்டில் சமைப்பதற்கு விறகின்றி பெரும் கஷ்டங்களை எதிர்நோக்குவதாகவும் அங்கு காத்திருந்த வயோதிபத் தாய் ஒருவர் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-21 06:18:19
news-image

எனக்கு பட்டலந்த குறித்து பேசுவதில் தற்போது...

2025-03-21 06:14:02
news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43