சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 14,400 பேர் பாதிப்பு

By T. Saranya

03 Jun, 2022 | 12:50 PM
image

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் நகரில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் 14,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

குறித்த நிலநடுக்கம் புதன்கிழமை ரிச்டர் அளவுகோலில்  6.1 ஆகப் பதிவாகியுள்ளது.

14,427 affected after 6.1 magnitude earthquake jolts Sichuan (Photo Credit: Twitter)
(Photo Credit: Twitter)

நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதோடு, 41 பேர் காயமடைந்துள்ளதாக நகரின் நிலநடுக்க நிவாரண தலைமையகம்  நேற்று தெரிவித்துள்ளது.

17 கிமீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம் 30.37 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 102.94 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் கண்காணிக்கப்பட்டது.

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, தேசிய அவசர நிலை 3 ஐ அவசர மேலாண்மை அமைச்சகம் பிரகடனம் செய்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right