சென்னையில் இடம்பெறவுள்ள சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் 12 இலங்கை வீரர்கள் பங்கேற்பு

By Digital Desk 5

03 Jun, 2022 | 12:48 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவின் தமிழக தலைநகர் சென்னையில் நடைபெறவுள்ள 61 ஆவது மாநிலங்களுக்கு இடையிலான சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த 12 மெய்வல்லுநர்கள் பங்குபற்றவுள்ளனர்.

அழைப்பு போட்டியாளர்களாக பங்குபற்றும் இந்த 12 பேரும் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தி வெற்றிபெற முயற்சிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் அண்மையில் நடைபெற்ற சிரேஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டப்  போட்டியில் சாதனை நிலைநாட்டிய ரொஷான் தம்மிக்க, முப்பாய்ச்சலில் சாதனை நிலைநாட்டிய சமல் குமாரசிறி ஆகிய இருவரும் தனிநபர் நிகழ்ச்சிகளில் பங்குபற்றவுள்ளதாக ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் (இலங்கை மெய்வல்லுநர் சங்கம்) தெரிவித்தது.

இதேவேளை, ஆண்களுக்கான 4 X 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியிலும் பெண்களுக்கான 4 X 100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியிலும் இலங்கை பங்குபற்றவுள்ளது.

ஆண்களுக்கான 4 X 400 மீற்றர் தொடர் ஓட்ட அணியில் அருண தர்ஷன, இசுறு லக்ஷான், பபாசர நிக்கு, தினூக்க தேஷான், ஆர்.எம். ராஜகருண ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

பெணகளுக்கான 4 X 100 மீற்றர் தொடர் ஓட்ட அணியில் அமாஷா டி சில்வா, ருமேஷிக்கா ரத்நாயக்க, ஷெலிண்டா ஜென்சென், மேதானி ஜயமான்ன, லக்ஷிகா சுகந்தி ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

மே மாதம் 10ஆம் திகதியிலிருந்:து 14ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்திய மாநிலங்களுக்கு இடையிலான மெய்வல்லுநர் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியினர் எதிர்வரும் 9ஆம் திகதி சென்னை பயணமாகவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right