(எம்.மனோசித்ரா)
இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்பல்டன் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கிடையில் பத்தரமுல்ல - குஹூருபாயவிலுள்ள அமைச்சில் நேற்று(2) வியாழக்கிழமை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது நாட்டில் தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடி, இளைஞர் எதிர்ப்பு மற்றும் அவற்றுக்கு வழங்கப்படக் கூடிய தீர்வுகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
இலங்கை மற்றும் நியூசிலாந்திற்கிடையிலான இருதரப்பு தொடர்புகளை பலப்படுத்துதல் , அவுஸ்திரேலியா - நியூசிலாந்து கடற்பரப்பின் ஊடாக இலங்கையர்கள் அனுமதியின்றி பயணித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இதன் போது கருத்து வெளியிட்ட நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் , 'பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கைகளுக்காக நியூசிலாந்து அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதோடு , இலங்கை பொலிஸாரின் நலனுக்கான ஒத்துழைப்புக்களையும் வழங்கும்.' என்று தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM