சிங்கள பௌத்தமேலாதிக்கத்தினை பரப்பும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் பொதுபலசேனா ஈடுபடுகின்றது - அமெரிக்கா

Published By: Rajeeban

03 Jun, 2022 | 10:40 AM
image

சிங்கள பௌத்தமேலாதிக்கத்தினை  பரப்புவதற்காகவும் மத மற்றும் இன சிறுபான்மையினத்தவர்களை கொச்சைப்படுத்துவதற்காகவும்  பொதுபலசேனா தொடர்ந்தும் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றது  என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

2021 இல் சர்வதேச மத சுதந்திரம் குறித்த தனது வருடாந்த அறிக்கையில் அமெரிக்கா இதனை தெரிவித்துள்ளது.

பொதுபல சேனா போன்ற பௌத்த தேசியவாத குழுக்களினால் வெளிபடையாக தென்படும் வகையில் முன்னெடுக்கப்படும் சமூக ஊடக பிரச்சாரங்கள் சிறுபான்மை குழுக்களை இலக்குவைத்து வன்முறையை தூண்டுகின்றனஎன சிவில் சமூக அமைப்புகள் தெரிவிக்கின்றன குறிப்பாக முஸ்லீம் சமூகத்தினர் இலக்கு வைக்கப்படுகின்றனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர் என  அமெரிக்கா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கையின் தேசிய கிறிஸ்தவ சுவிசேசக்கூட்டணி 2021 இல் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் போதகர்கள் மற்றும் அவர்களின் சபைகள் மீதும் இடம்பெற்ற 77 தாக்குதல்களை பதிவு செய்துள்ளது என தெரிவித்துள்ள அமெரிக்கா வழிபாடுகள் குழப்பப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன எனவும் தெரிவித்துள்ளது.

11 தடவை போதகர்கள் அவர்களின் சபைகள் அவர்களின் குடும்பத்தவர்கள் குழுவினர் தாக்கப்பட்டனர் என இலங்கையின் தேசிய கிறிஸ்தவ சுவிசேசக்கூட்டணி தெரிவித்துள்ளது.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லீம் அமைப்புகளும் அரசசார்பற்ற அமைப்புகளும் தங்கள் நடவடிக்கைகளை பொலிஸார் கண்காணிப்பதும் துன்புறுத்தல்களும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளன என அமெரிக்காவின் மத சுதந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களின் நடவடிக்கைகள் குறித்து  விசாரணை செய்வதற்காக இலங்கையின் பாதுகாப்பு படையினர் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்கின்றனர் தங்கள் அலுவலகங்களிற்கு வருகை தருகின்றனர் என முஸ்லீம் அமைப்புகள் தெரிவித்தன என அமெரிக்காவின் மத சுதந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரூ.24 பில்லியன் நட்டத்தில் இருந்து இலாப...

2026-09-09 12:25:53
news-image

20 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த மலையக மக்களின்...

2026-09-09 17:35:50
news-image

மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்...

2026-09-09 12:45:30
news-image

மலையக மக்களின் வீடு, காணி உள்ளிட்ட...

2026-09-09 17:31:26
news-image

ராஜபக்‌ஷ குடும்ப அரசியலுக்கு இனி மக்கள்...

2026-09-09 13:44:30
news-image

ராஜ்நாத் சிங் இலங்கை விஜயத்தில் கைச்சாத்திடப்பட்ட...

2026-09-09 17:30:07
news-image

மன்னார்–இராமேஸ்வரம் நேரடி பயணிகள் கப்பல் சேவையை...

2026-09-09 14:12:24
news-image

திருகோணமலை துறைமுகத்தில் உள்ள ஈரான் கப்பல்...

2026-09-09 17:02:51
news-image

பயங்கரவாதத் தடைச் சட்டம்: அரசாங்கத்தின் சர்வதேச...

2026-09-09 14:21:59
news-image

பெருந்தோட்டக் கம்பனிகளின் குத்தகை காலத்தை நீடிக்கும்...

2026-09-09 17:36:29
news-image

இந்திய கடற்படையின் பிரதிப் பிரதானி உத்தியோகபூர்வ...

2026-09-09 22:49:48
news-image

நாட்டில் அதிகரிக்கும் கொலைச் சம்பவங்கள்: தேசிய...

2026-09-09 14:52:24