மூளையில் ஏற்படும் இடையூறுகளை துல்லியமாக அவதானிக்கும் நவீன பரிசோதனை

Published By: Digital Desk 5

03 Jun, 2022 | 11:33 AM
image

பாடசாலையில் இறைவணக்க வேளையில் மாணவ மாணவிகள் வரிசையில் நின்று பிரார்த்தனை பாடல்களை பாடும்போது, சில தருணங்களில் மாணவ மாணவிகளில் யாரேனும் திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுந்து விடுவர். சிலர் உடனடியாக ஆழ்மயக்க நிலைக்கு சென்று விடுவர்.

ஆசிரியர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதிப்பர். இதன்போது பாதிக்கப்பட்ட மாணவருக்கு எம்மாதிரியான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை துல்லியமாக அவதானிக்க மருத்துவர்கள் இ இ ஜி எனப்படும் எலக்ட்ரோ என்செபலோகிராபி என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பார்.

எம்மில் பலருக்கும் இதயம் தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு இருந்தால் ஈ சி ஜி எனப்படும் பரிசோதனையை செய்திருப்போம்.

அது தொடர்பான விழிப்புணர்வும் இருக்கும். ஆனால் மருத்துவர்கள் இ இ ஜி பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றவுடன் முதலில் தயக்கம் காட்டுவர்.

இந்த பரிசோதனை, மூளையின் செயல்பாடுகளையும், மூளையின் மேற்பகுதியில் உள்ள நியுரான் எனப்படும் செல்களுக்கு இடையேயான மின்னாற்றல் திறன் குறித்தும் மேற்கொள்ளப்படுகிறது.

சிலருக்கு பாதிப்பின் தன்மையை தெரிந்து கொள்வதற்காகவும், எம்மாதிரியான சிகிச்சையை வழங்குவது குறித்தும் இத்தகைய பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

சிலருக்கு பாதிப்பின் தன்மையை பொறுத்து, ஒரு வார காலத்திற்கும் மேலாக இத்தகைய பரிசோதனையை தொடர்ந்து மேற்கொள்வர்.

சிலருக்கு கார்டியோஜெனிக் சிங்கோப் ( Cardiogenic Syncope ) என்ற பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா? என்பதனை கண்டறியவும் இத்தகைய இ இ ஜி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதயத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்க, மருத்துவர்கள் வைத்தியசாலைகளில் ஹால்டர் மானிட்டரிங் எனும் பரிசோதனையை மேற்கொள்வதைப் போன்று, மூளையின் செயல்பாட்டை துல்லியமாக அவதானிக்க இந்த இ. இ. ஜி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இத்தகைய பரிசோதனைகளின் மூலம் மூளையில் ஏற்படும் கட்டிகள், காயங்கள், மூளையின் செயலிழப்புக்கான காரணங்கள், உறக்கமின்மை பாதிப்பு, மூளை அழற்சி, பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை கண்டறியலாம். அதனைத் தொடர்ந்து முறையான சிகிச்சை அளித்து, அவர்களை பாதிப்பிலிருந்து மீள்வதற்குரிய முழுமையான நிவாரணத்தை அளிக்கலாம்.

டொக்டர் கோடீஸ்வரன்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29