பிரசன்னாவின் 'ஃபிங்கர்டிப் 2'

Published By: Digital Desk 5

03 Jun, 2022 | 11:31 AM
image

நடிகர் பிரசன்னா, நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா மற்றும் அபர்ணா பாலமுரளி நடிப்பில் தயாராகியிருக்கும் 'ஃபிங்கர்டிப்' என்ற வலைதள தொடரின் இரண்டாம் பாகம் எதிர்வரும் ஜூன் 17ஆம் திகதியன்று ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜி5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் வலைதள தொடர்களுக்கு தனித்துவமான வரவேற்பு பார்வையாளர்களிடத்தில் இருக்கிறது.

நடிகைகள் அக்ஷரா ஹாசன், காயத்ரி, சுனைனா மற்றும் அஸ்வின் நடிப்பில் வெளியான 'ஃபிங்கர்டிப்' வலைதளத் தொடருக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.

இதற்கு திரைக்கதை எழுதிய ஷிவாகர், 'ஃபிங்கர்டிப்'தொடரின் இரண்டாவது சீசனுக்கும் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார்.

இந்த தொடரில் நடிகர்கள் பிரசன்னா, வினோத் கிஷன், கண்ணா ரவி, சரத் ரவி, நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் நடிகர்கள் கிட்டி, மாரிமுத்து, நடிகை ஹரிணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த தொடருக்கு தீனதயாளன் இசையமைத்திருக்கிறார்.

தொடர் குறித்து இயக்குநர் பேசுகையில், '' ஃபிங்கர்டிப் இரண்டாவது சீசன் ஒரு கிரைம் திரில்லர் தொடர். டிஜிட்டல் தளங்கள் மற்றும் டிஜிட்டல் யுகத்தின் ஆற்றல் குறித்து இதன் திரைக்கதை விவரிக்கிறது.

டிஜிட்டல் உலகில் ஏற்படும் ஆபத்துகளையும் சுட்டிக் காட்டியிருக்கிறோம். தொழில்நுட்பம் என்பது இரு பக்கமும் கூரான கத்தி போன்ற ஒரு கருவி என்பதையும், இதனை கவனமாக கையாள வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் வகையில் திரைக்கதை மற்றும் கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த தொடரில் ஆறு கதாபாத்திரங்களின் வாழ்க்கை மையப்படுத்தப்பட்டிருக்கிறது. சிலர் வேட்டையாடுபவர்கள், சிலர் டிஜிட்டல் குற்றங்களில் ஈடுபட்டு, டிஜிட்டல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள்.

இவர்கள் அனைவரையும் ஹைப்பர்லிங்க் பாணியில் இணைக்கப்பட்டு, பார்வையாளர்களுக்கு புதுவித அனுபவத்தை வழங்கி இருக்கிறோம்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right