மிகுந்த எதிர்பார்ப்புடன் கத்தாரிலிருந்து உஸ்பெகிஸ்தான் நோக்கி இலங்கை கால்பந்தாட்ட அணியினர் பயணம் 

02 Jun, 2022 | 09:36 PM
image

(நெவில் அன்தனி)

கத்தாரில் சில நாட்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்த இலங்கை கால்பந்தாட்ட அணியினர் மிகுந்த எதிர்பார்ப்புடன் உஸ்பெகிஸ்தானில் நடைபெறவுள்ள AFC ஆசிய கிண்ண கடைசி தகுதிகாண் சுற்றில் பங்குபற்ற கத்தாரிலிருந்து வெள்ளிக்கிழமை (03) புறப்பட்டுச் செல்கின்றனர்.

கத்தார், அஸ்பயர் பயிற்சியகத்தில் பயிற்சி பெற்று வந்த 36 வீரர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட அதிசிறந்த 23 வீரர்கள் உஸ்பெகிஸ்தான் செல்லவுள்ளனர்.

இலங்கையிலிருந்து கடந்த மாதம் 25ஆம் திகதி கத்தார் நோக்கிச் சென்ற இலங்கை குழாத்தில் 33 வீரர்கள் இடம்பெற்றனர். அவர்களுடன் இங்கிலாந்திலிருந்து டிலொன் டி சில்வா இணைந்துகொண்டார்.

டிலிப் பீரிஸின் முழங்காலில் உபாதை ஏற்பட்டுள்ளதாலும் வசீம் ராஸீக் இலங்கை அணியுடன் இணைய விரும்பாததாலும் அவர்கள் இருவருக்கும் பதிலாக எம்.என்.எம். பஸால், சமோத் டில்ஷான் ஆகிய இருவரும் இலங்கை குழாத்தில் கடந்த திங்கட்கிழமை இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த தலைமைப் பயிற்றுநர் அண்ட்றூ மொறிசன், உதவி பயிற்றுநர் கீத் ஸ்டீவன்ஸ் மற்றும் உடற்தகுதி ஆலோசக பயிற்றுநர் மார்க்கஸ் பெரேரா ஆகியோரிடம் பயிற்சி பெற்று வரும் இலங்கை விரர்களின் ஆற்றல்கள் மிகக் குறுகிய காலத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அறிய கிடைக்கிறது.

எனவே, ஆசிய கிண்ண கடைசி தகுதிகாண் சுற்றில் தாய்லாந்து, மாலைதீவுகள் ஆகிய அணிகளுக்கு எதிராக இலங்கை அணி எதையாவது சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்பப் போட்டியில் பலம் வாய்ந்த வரவேற்பு நாடான உஸ்பெகிஸ்தானை எதிர்வரும் 8ஆம் திகதி இலங்கை எதிர்த்தாடவுள்ளது. அப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி உஸ்பெகிஸ்தான் கோல் மழை பொழிவதைத் தடுக்க இலங்கை முயற்சிக்கவுள்ளது.

11ஆம் திகதி நடைபெறவுள்ள தாய்லாந்துடனான போட்டியிலும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள மாலைதீவுகளுடனான போட்டியிலும் இலங்கை அணி மிகச் சிறப்பாக விளையாடி உலக தரவரிசையில் முன்னேறுவதற்கு முயற்சிக்கவுள்ளது.

உஸ்பெகிஸ்தான் செல்லும் இலங்கை வீரர்கள்

கோல் காப்பாளர்கள்: சுஜான் பெரேரா (தலைவர்), லக்ப்ரிய பெர்னாண்டோ, ருவன் அருணசிறி.

பின்கள வீரர்கள்: சத்துரங்க மதுஷான், ஹர்ஷ பெர்னாண்டோ, சலன சமீர, தர்மகுலநாதன் கஜகோபன், சரித்த ரத்நாயக்க, சமோத் டில்ஷான், அப்துல் பாசித், அபீல் மொஹமத்.

மத்திய கள வீரர்கள்: அசிக்கூர் ரஹுமான், செபஸ்தியான்பிள்ளை ஜேசுதாசன், மரியதாஸ் நிதர்சன், செபமாலைநாயகம் ஜூட் சுபன், மொஹமத் அமான், சசங்க டில்ஹார, மொஹமத் பஸால்.

முன்கள வீரர்கள்: டிலொன் டி சில்வா, மொஹமத் ஆக்கிப், மொஹமத் ஷிபான், ஷெனால் சந்தேஷ், ஷபீர் ரஸூனியா.

தலைமைப் பயிற்றுநர்: அண்ட்றூ மொறிசன்,

உதவிப் பயிற்றுநர்: கீத் ஸ்டீவன்ஸ்,

இடைக்கால உள்ளூர் பயிற்றநர்: மொஹமத் ஹசன் ரூமி,

உள்ளூர் உதவி பயிற்றுநர்கள்: இராஜமணி தேவசகாயம், மொஹமத் ரட்னம் ஜஸ்மின்,

கோல் காப்பாளர் பயிற்றுநர்: பி.வி.எஸ்.பி. தயாவன்ச,

உடற்தகுதி ஆலோசகர்: மார்க்கஸ் பெரெய்ரா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில்...

2025-04-17 03:42:47
news-image

இலங்கைக்கு இரண்டாவது வெள்ளிப் பதக்கம்: பெண்களுக்கான...

2025-04-17 03:40:20
news-image

சுப்பர் ஓவரில் ராஜஸ்தான் றோயல்ஸை டெல்ஹி...

2025-04-17 03:38:02
news-image

பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டத்தில் சர்ச்சை;...

2025-04-16 23:21:01
news-image

லொஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு...

2025-04-16 17:15:53
news-image

ஆசிய ஹொக்கி சம்மேளனக் கிண்ணம் 2025;...

2025-04-16 16:06:32
news-image

 யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைக்க ...

2025-04-16 02:15:30
news-image

18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தில் குறைந்த எண்ணிக்கைகள்...

2025-04-16 01:47:52
news-image

18இன் கீழ் ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்:...

2025-04-16 01:45:17
news-image

18 வயதுக்குட்பட்ட ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்:...

2025-04-16 01:42:08
news-image

ஆப்கன் ஏ அணிக்கு எதிராக சதீர...

2025-04-15 19:55:17
news-image

18இன் கீழ் ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்...

2025-04-15 16:34:11