(எம்.மனோசித்ரா)
ஐக்கிய தேசிய கட்சியின் முழு நேர அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுமாறு அதன் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் செயற்பாடுகளுக்கு அதன் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன தலைமை வகிக்கவுள்ளார். அண்மையில் ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது எதிர்கொண்டுள்ள கடும் நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்பதற்கான வேலைத்திட்டங்களில் தான் முழுமையாக ஈடுபட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் , கட்சியின் அரசியல் செயற்பாடுகளும் முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பிரதமர் வழங்கிய ஆலோசனைகளுக்கமைய ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார எதிர்வரும் தினங்களில் முழுமையாக கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM