துமிந்த சில்வா வைத்தியசாலையின் முதற் தர சிகிச்சை அறைக்கு மாற்றம்

Published By: Digital Desk 3

02 Jun, 2022 | 04:56 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா,  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புக் குழுவினரால் கைது செய்யப்பட்ட நிலையில்,  உயர் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்புக்கு இடைக்காலத் தடை  | Virakesari.lk

இந் நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளின்  பொறுப்பில் அவர்,  ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் உறுதி செய்தது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியளித்த பொது மன்னிப்பை உயர் நீதிமன்றம்  இடைநிறுத்தி, இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்த நிலையில், அவரைக் கைது செய்து சிறையிலடைக்குமாறு சி.ஐ.டி. பணிப்பாளருக்கு  கடந்த மே 31 ஆம் திகதி கட்டளையுமிட்டது.

 அதன்படியே நேற்று (01) மாலை, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு சென்ற சி.ஐ.டி. சிறப்புக் குழு  ஆர். துமிந்த சில்வாவை கைது செய்திருந்ததுடன், இரவோடிரவாக அவரை சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பினில் ஒப்படைத்தது.

கடந்த மே 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பதிவான வன்முறைகளைத் தொடர்ந்து பல பிரமுகர்கள் நாட்டிலிருந்து வெளியேறிய நிலையில், அப்போது துமிந்த சில்வாவும்  நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார்.

எனினும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் மீள நாட்டுக்கு வந்திருந்த நிலையில்,  கடந்த  மே 31 ஆம் திகதி  உயர் நீதிமன்றின் உத்தரவைத் தொடர்ந்து  ஸ்ரீ ஜயவர்தன புர வைத்தியசாலையில் திடீர் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்பு வலி எனப்படும் வலிப்பு நோய் காரணமாக அவர் இவ்வாறு ஸ்ரீ ஜயவர்தன புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலையின் 18 ஆம் இலக்க  நோயாளர் அறையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. 

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலையின் பின்னரான நிலைமையின் போது அவருக்கு சிகிச்சையளித்த வைத்தியர்  மகேஷி விஜேரத்ன தலைமையிலான குழுவினர் அவருக்கு அங்கு சிகிச்சையளித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே அவரை சி.ஐ.டி.யினர்  நேற்று (1) கைது செய்திருந்தனர்.

இந் நிலையில் நேற்று ( 1) முழுதும் துமிந்த சில்வாவுக்கு, பி.சி.ஆர். பரிசோதனை ஒன்றும், ஒரு எக்ஸ்ரே பரிசோதனையும் மட்டுமே முன்னெடுக்கப்பட்டிருந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், இன்று ( 2) அவர் 18 ஆம் இலக்க சிகிச்சை அறையிலிருந்து 3 ஆம் இலக்க  சிகிச்சை அறையில் உள்ள முதற் தர சிறப்பு சிகிச்சை பகுதிக்கு  ( வோர்ட்) மாற்றப்பட்டுள்ளார்.

 வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் அறிவுறுத்தல் பிரகாரம் அவர் அவ்வாறு  மாற்றப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

குறித்த வைத்தியர், இதற்கு முன்னரும் பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரவின் கொலையின் பின்னரான நிலைமையின் போது துமிந்த சில்வாவுக்கு வழங்கிய சிகிச்சைகள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு அப்போது உள்ளாகியிருந்தார்.

 சிறை அதிகாரிகளின் பொறுப்பில் எடுக்கப்படும் நபர் ஒருவர்,  சிறைச்சாலை வைத்தியசாலையில் அல்லது அரச வைத்தியசாலை ஒன்றிலேயே சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட வேண்டும் என சிறைச்சாலைகள் அதிகாரி ஒருவர் வீரகேசரிக்கு சுட்டிக்காட்டினார்.

 இந் நிலையில் இது குறித்து சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்கவிடம் வினவிய போது, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையும் அரச வைத்தியசாலை என்ற ரீதியில், அங்கு துமிந்த சில்வா சிகிச்சைப் பெறுவது  தொடர்பில் சிக்கலில்லை என தெரிவித்தார். 

அத்துடன் அவ்வாறு அரச வைத்தியசாலையில் எந்த சிகிச்சை அறையில் சிகிச்சை பெற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் சிகிச்சையளிக்கும் வைத்தியருக்கே உள்ள நிலையில், அதில் சிறைச்சாலை அதிகாரிகள் தலையீடு செய்ய முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில் படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் திகதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மற்றும் இருவர் மேல் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்த விஷேட  மேன்முறையீட்டு மனுக்களை நிராகரிக்க அப்போதைய பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஐவரடங்கிய  உயர் நீதிமன்ற நீதியரசர்கள்  குழாம் ஏகமனதாக தீர்மானித்தது.  

இவ்வாறான நிலையிலேயே துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கடந்த 2021 ஜூன்  24 ஆம் திகதி பொசன் போயா தினந்தன்று பொதுமன்னிப்பளித்தார்.

அந்த மன்னிப்பு தற்போது உயர் நீதிமன்றால் இடை நிறுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, அவர் மீண்டும் சிறையிலடைக்க கைது செய்யப்ப்ட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:25:52
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22