முச்சக்கர வண்டி விபத்தில் தாயும் மகளும் பலி ; தந்தையும் மகனும் படுகாயம்

Published By: Digital Desk 3

02 Jun, 2022 | 01:19 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

ஏ-9 பிரதான வீதியில் கவரக்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில்  தாயும் மகளும் உயிரிழந்துள்ளதுடன், தந்தையும் மகனும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  கவரங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

தம்புளையிலிருந்து அநுராதபுரம் நோக்கி வழிபாடுகளுக்காக சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணித்த முச்சக்கர வண்டியே இவ்வாறு கவரன்க்குளம் பகுதியில் பாதையை விட்டு விலகி அருகில் இருந்த கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது 41 வயதுடைய தாயும் 13 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளதுடன் படுகாயம் அடைந்த தந்தையும் மகனும் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

இவர்கள் நால்வரும் தம்புள்ள-ரத்மல்கஹ எல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

சம்பவம் தொடர்பில் கவரங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க சென்னை...

2026-05-16 17:20:15
news-image

உலகின் மிக நீண்ட தொடு உணர்...

2026-05-16 16:42:22
news-image

UPDATE ; வனவாசல ரயில் விபத்து...

2026-05-16 16:13:27
news-image

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டம்...

2026-05-16 17:03:48
news-image

கடலில் காற்றின் வேகம், மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும்...

2026-05-16 16:33:52
news-image

முள்ளிவாய்க்கால் கண்ணீர் ஓயாது ; அந்த...

2026-05-16 15:09:07
news-image

களுத்துறையில் 600 போதை மாத்திரைகளுடன் ஒருவர்...

2026-05-16 14:52:18
news-image

ரம்பேவ பகுதியில் விநியோகிக்கப்பட்ட MOP உரத்தின்...

2026-05-16 14:58:43
news-image

மானிப்பாயில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு

2026-05-16 15:19:02
news-image

நாடளாவிய ரீதியில் பொலிஸார் அதிரடியாக சுற்றிவளைப்பு...

2026-05-16 17:27:10
news-image

காலி கோட்டை அமைதிப் போராட்டம் :...

2026-05-16 14:48:58
news-image

வாகன இறக்குமதி வரி அதிகரிப்பு தற்காலிகமானது...

2026-05-16 14:43:20