சிறுபோகத்திற்கான உரத்தை வழங்க இந்திய பிரதமர் மோடி இணக்கம்  : ஜனாதிபதி கோட்டா தெரிவிப்பு

02 Jun, 2022 | 12:32 PM
image

(எம்.மனோசித்ரா)

சிறுபோகத்துக்கான உரங்களை விரைவில் வழங்குவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்த உரமானது இந்திய கடனுதவியுடன் வழங்கப்படுவதுடன், உரம் கிடைக்கப் பெற்றவுடன் அதனை 20 நாட்களுக்குள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

May be an image of 5 people, people standing and indoor

நீர்ப்பாசனத் துறை எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் தீர்வுகள் தொடர்பில் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

உமா ஓயா மற்றும் மொரகஹகந்த திட்டங்களை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்து பெரும்போகத்திற்கான அனுகூலங்களை பெற்றுக் கொடுக்க முடியும் என கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது. 

மொராண, மஹகல்கமுவ சார் கால்வாய், மஹகோன குளம், விலகண்டிய குளம் மற்றும் கொடிகமுவ குளம் ஆகிய திட்டங்கள் இதற்கு இணையாக ஒரே நேரத்தில் பூர்த்தி செய்யப்பட உள்ளன. 

வெளிநாட்டு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களை குறித்த காலத்திற்குள் நிறைவுசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி இதன் போது பணிப்புரை விடுத்தார்.

கடந்த மூன்று நாட்களில் மொத்த மின் உற்பத்தியில் 80 சதவீதம் நீர் மற்றும் காற்றாலை மின்சாரம் மூலம் தேசிய மின்கட்டமைப்பிற்கு வழங்கப்பட்டமை தெரியவந்துள்ளது. 

மிதக்கும் சூரியசக்தி பேனல் திட்டங்களை மேம்படுத்தவும் கூரையில் பொருத்தப்படும் சூரியசக்தி பேனல்களுக்கு வழங்கப்படும் உதவிகளை அதிகரிக்கவும் நுகர்வோரை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி  தெரிவித்தார்.

சிறுபோகத்தில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின் கீழ் நீர் வழங்கப்படும் நீர்ப்பாசன நிலங்களில் 50 சதவீதம் ஏற்கனவே பயிரிடப்பட்டுள்ளது. 

225,000 மகாவலி வீட்டுத்தோட்டங்கள் மேலதிக பயிர்களை பயிரிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்ததோடு, இதுவரை நெல் பயிரிப்படாத காணிகளில் வேறு பயிர்களைப் பயிரிட ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னஞ்செய்கையாளர்களுக்கு உர மானியங்கள் வழங்க நடவடிக்கை...

2025-03-24 09:26:27
news-image

“இன்ஸ்டாகிராம் களியாட்ட நிகழ்வு” : 57...

2025-03-24 09:14:28
news-image

இன்றைய வானிலை

2025-03-24 06:37:57
news-image

வாக்குகளுக்காக வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கம் பொய்யான...

2025-03-24 03:22:42
news-image

நாடளாவிய ரீதியில் 3 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-24 03:16:05
news-image

சர்வதேசத்தின் மத்தியில் பாதுகாப்பு படையினரை காட்டிக்...

2025-03-24 03:09:11
news-image

சீனாவின் K-18 விமானங்களை பரிசோதனை செய்கிறது...

2025-03-24 03:04:35
news-image

ஐ.தே.க. உறுப்பினர்களுடன் இணைந்து சபைகளை நிறுவுவோம்...

2025-03-24 03:02:35
news-image

மக்களுக்கான நன்மைகளை படிப்படியாக அழித்து வரும்...

2025-03-23 17:54:24
news-image

நாணய நிதியத்தின் தேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜட்...

2025-03-23 16:42:49
news-image

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையைப் பாதுகாக்க...

2025-03-23 16:34:05
news-image

காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில்...

2025-03-23 21:51:48