ஐந்து மாதங்களில் 288,645 பேர் கடவுசீட்டை பெற்றுள்ளனர் - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

Published By: Digital Desk 3

02 Jun, 2022 | 11:35 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் 288,645 பேர் தமது  கடவுசீட்டிற்கு விண்ணப்பித்து பெற்றுக்கொண்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளரும்  ஊடகப் பேச்சாளருமான பியூமி பண்டார தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டில் 382,506 கடவுச்சீட்டுகள் மாத்திரமே விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பியூமி பண்டார, 

நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து பலர் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடியுள்ளதாகவும், இதனால் அதிகமானோர் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இவ்வாண்டு ஜனவரியில் 52,278 உம், பெப்ரவரியில் 55,381 உம், மார்ச்சில் 74,890 உம், ஏப்ரலில் 53,151 உம், மே மாதம் 52,945 ஆகிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், ஆயிரகணக்கானோர் கடவுச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள வருவதனால் எமது அதிகாரிகள் கடமைகளை மேற்கொள்வதில் பாரிய சிரமத்தை எதிர்கொண்டு வருவதாகவும்,  முன்பதிவு செய்யாதவர்கள் தலைமை அலுவலகத்தைச் சுற்றி  நாளாந்தம் பல கிலோமீற்றர் தூரம் வரிசையில் நிற்பதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

நாளாந்தம் 1,500 க்கும் அதிகமானோர் சேவையாற்றி வருகின்றனர். ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை பெறுவதாயின் பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் மேற்கொள்ள முடியும். 

சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுகளை பெறுவதற்கு  பத்தரமுல்லை, மாத்தறை, குருநாகல், கண்டி, வவுனியா ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவ, செயற்குழு,...

2025-01-19 18:59:43
news-image

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா...

2025-01-19 18:59:48
news-image

குளத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

2025-01-19 19:10:02
news-image

நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை...

2025-01-19 19:14:22
news-image

நெடுங்கேணியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது !

2025-01-19 18:41:32
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார் 

2025-01-19 18:09:02
news-image

மட்டக்களப்பில் குளங்கள் நிரம்பி வான் பாயும்...

2025-01-19 19:04:51
news-image

மன்னார் நீதிமன்றத்துக்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி...

2025-01-19 17:09:55
news-image

பன்னல வனப் பகுதியில் ஆண், பெண்...

2025-01-19 16:58:07
news-image

இன, மத மனங்களையும் சுத்தப்படுத்துவதான் கிளின்...

2025-01-19 19:02:36
news-image

அடைமழையினால் நுவரெலியா - உடப்புசல்லாவை பிரதான...

2025-01-19 16:50:40
news-image

கொழும்பு முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர்...

2025-01-19 16:52:59