பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் : ஜோகோவிச்சை வெற்றிகொண்டு அரை இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார் நடால்

02 Jun, 2022 | 12:14 PM
image

(என்.வீ.ஏ.)

பாரிஸ் ரோலண்ட் கெரொஸ் டென்னிஸ் அரங்கில் புதன்கிழமை (01) இரவு நடைபெற்ற பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் கால் இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை 3 - 1 செட்கள் அடிப்படையில் ஸ்பெய்ன் வீரர் ரபாயல் நடால் வெற்றிகொண்டு அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றார்.

இந்த கால் இறுதிப் போட்டி மிகவும் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டதை நான்கு மணித்தியாலங்கள் நீடித்த போட்டி அதிகாலை 1.15 மணிக்கு முடிவடைந்த  பின்னர் 5ஆம் நிலை வீரர் ரபாயல் நடாலும் முதல் நிலை வீரர் நோவாக் ஜோகோவிச்சும் ஒப்புக்கொண்டனர்.

Lost to a better player': Djokovic after going down to Nadal in French Open  | Tennis News - Hindustan Times

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியில் தனது 14ஆவது சம்பியன் பட்டத்துக்கு குறி வைத்துள்ள நடால், மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கால் இறுதிப் போட்டியில் 6 - 2, 4 - 6, 6 - 2, 7 (7) - 6 (4) என்ற புள்ளிகள் அடிப்படையில்  ஜோகோவிச்சை  வெற்றிகொண்டார்.

இப் போட்டி தாமதித்து ஆரம்பிக்கப்பட்டதாலும் வெப்பநிலை 10 பாகை செல்சியசாக குறைந்திருந்ததாலும் சில இரசிகர்கள் வேளையோடு சென்றுவிட்டனர். அரங்கில் எஞ்சியிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் போர்வைகளால் தங்களைப் போர்த்திக்கொண்டு கால் இறுதிப் போட்டியை கண்டு களித்தனர்.

இப் போட்டி தாமதமாக ஆரம்பித்தது குறித்து  ஜோகோவிச்சிடம் கேட்கப்பட்டபோது, 'போட்டி தாமதித்து ஆரம்பித்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், ஒளிபரப்பு உரிமத்தை பெறும் தொலைக்காட்சி சேவை பெருந்தொகைப் பணத்தைக் கொடுக்கிறது. ஆனால், நாம் சமநிலையைப் பேணுவதற்கான வழியைக் காணவேண்டும். ஒளிபரப்பாளர்கள் பணம் கொடுப்பதால் போட்டிகள் நடத்தப்படவேண்டிய நேரத்தை தீர்மானிக்கிறார்கள்' என்றார்.

'இப் போட்டி தாமதித்து ஆரம்பித்ததை ஒப்புக்கொள்கிறேன். அது சற்று சிரமமானதுதான். ஆனால், இரவு போட்டிகளில் விளையாடுவதை பெரிதும் விரும்புகிறேன்' என ரபாயல் நடால் குறிப்பிட்டார்.

வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அரை இறுதிப் போட்டியில் ஜேர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ்வை நடால் எதிர்த்தாடவுள்ளார்.

புதன்கிழமை நடைபெற்ற மற்றைய கால் இறுதிப் போட்டிகளில் வெற்றிபெற்ற குரோஏஷிய வீரர் மரின் சிலிக், நோர்வே வீரர் கெஸ்பர் ரோட் ஆகிய இருவரும் மற்றைய அரை இறுதிப் போட்டியில் ஒருவரை ஒருவர் எதிர்த்தாடவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்று சோண்டர்ஸ் - யங் சில்வர்,...

2024-03-03 09:40:12
news-image

107ஆவது பொன் அணிகளின் சமர் :...

2024-03-03 09:38:44
news-image

யூபி வொரியர்ஸிடம் வீழ்ந்த குஜராத் ஜயன்ட்ஸின்...

2024-03-02 14:30:01
news-image

விக்டரி - குறே கழகங்களுக்கு இடையிலான...

2024-03-02 14:01:12
news-image

குசல் பெரேராவுக்குப் பதில் நிரோஷன் திக்வெல்ல

2024-03-01 22:47:20
news-image

ரசிகர்களை கோபமூட்டிய ரொனால்டோவுக்கு ஒரு போட்டித்தடை,...

2024-03-01 17:22:29
news-image

ஆஸி. வீரர் க்றீன் ஆட்டம் இழக்காமல்...

2024-03-01 16:18:07
news-image

டெல்ஹியின் வெற்றியில் கெப், ஜொனாசன், ஷஃபாலி...

2024-03-01 15:05:04
news-image

ஒலிம்பிக் விழாவுக்கான பாதுகாப்பு திட்டங்களைக் கொண்ட...

2024-02-29 20:04:27
news-image

பங்களாதேஷுடனான தொடர்களில் திறமையை வெளிபடுத்த முடியும்...

2024-02-29 14:55:53
news-image

பங்களாதேஷுடனான முதல் இரண்டு ரி20 போட்டிகளில்...

2024-02-28 23:55:46
news-image

பொதுநலவாய செஸ் போட்டியில் இலங்கைக்கு ஒரு...

2024-02-28 21:19:17