கொரோனா காலத்தில் நோயாளிகளை அணுகும்போது தலையிலிருந்து கால் வரை மூடிக்கொண்டுதான் வருவது வழக்கம். இது நோய்த்தொற்று பரவுவதை தடுக்கத்தான்.
வெளியிலிருந்து உள்ளேயும், உள்ளேயிருந்து வெளியேயும் பரவுவதைத் தடுக்கும் 'இருவழிப் பாதுகாப்பு' என்பதை நம் முன்னோர் அறிந்து இருந்தார்கள். இந்த விதிமுறைக்குச் சிறந்த உதாரணம் அந்தக் காலத்தில் பிரசவித்த தாயையும் சேயையும் பாதுகாத்த விதம்தான்.
பிரசவங்கள் வீட்டிலேயே உள்ள பிரசவ அறையில் நடக்கும். அனுபவமுள்ள ஒரு பெண்மணியோ அல்லது கிராமத்து மருத்துவிச்சியோதான் மேற்பார்வை பார்த்து நடத்துவார்கள்.
பிரசவ அறையின் ஒரு மூலையில் ஒரு நீண்ட குழி இருக்கும். நன்கு மெழுகப்பட்டு அதிலே சுத்தமான, விளக்கெண்ணெய் தடவப்பட்ட ஒரு வாழை இலை விரிக்கப்பட்டு இருக்கும். நல்ல வலி தொடங்கியதும் கர்ப்பிணி அந்த மூலையில் உட்கார வைக்கப்படுவார்.
குத்திட்டு இரு முழங்கால்களையும் கைகளால் அணைத்துக் கொண்டு, அந்தக் குழி கால்களின் இடையில் இருக்குமாறு அமர்ந்து இருப்பார். குழந்தை வெளிப்படும்போது அந்த இலையில் ஏந்தப்படும்.
தொப்புள் கொடி நறுக்கப்பட்டு, சுத்தமாகத் துணி விரிக்கப்பட்ட புது முறத்தில் குழந்தை கிடத்தப்படும். நஞ்சு வெளிப்பட்டதும் அது புதைக்கப்படும். அல்லது சில கிராமங்களில் அதைத் துணியில் முடிந்து கிராமத்தின் வெளியே மரத்தில் கட்டப்படும்.
பிரசவித்த பெண்ணை சுத்தப்படுத்தி, ஒரு நீண்ட துணியால் வயிற்றையும் இடுப்பையும் சுற்றிக் கட்டுவார்கள். இது தளர்ந்த தசைகளுக்கு ஆதரவு தரும். பிறகுதான் தொடங்கும் 'இருவழிப் பாதுகாப்பு'.
அடுத்த 40 நாட்கள் தாயும் சேயும் அந்த அறையிலேயே இருப்பார்கள். குடும்பத்தைச் சேர்ந்த அத்தையோ சித்தியோ அக்காவோ அவர்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்வார். எப்படித் தெரியுமா?
குளித்து விட்டுத்தான் அறைக்குள் போவார். ஆம். ஒவ்வொரு முறையும், தாயையும் சேயையும் கவனித்துவிட்டு வெளியில் வந்ததும் மீண்டும் ஒரு குளியல்.
தாய் - சேய் இருவருடைய உடுப்புகளும் துணிகளும் தனியாகத்தான் துவைக்கப்படும். முடிந்தால் ஓடும் நீரில். பார்க்க வருபவர்கள் அறையின் வாயிலில் நின்றுதான் பார்க்க வேண்டும். குழந்தையைக் கையில் எடுத்து நீட்டிக் காண்பிப்பார்கள். யாரும் குழந்தையைத் தொட அனுமதி இல்லை.
இக்காலத்து மருத்துவ ரீதியாகப் பார்த்தாலும் இந்த 40 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு அர்த்தம் இருக்கிறது. பிறந்த சிசுவுக்கு நோய்த் தடுப்பு சக்தி முழுமையாக ஏற்பட 6 வாரங்கள் பிடிக்கும் என்பதுதான் உண்மை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM