கிளிநொச்சியில் சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்ள வரிசையில் நின்ற மக்கள் வீதி மறியல் போராட்டம்

By T. Saranya

01 Jun, 2022 | 11:26 AM
image

கிளிநொச்சியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்வதற்கு அதிகாலை முதல் காத்திருந்த மக்கள் ஏ-9 வீதியை மறித்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை  தொடர்ந்து எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் தினமும் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வருகின்றனர்.

கிளிநொச்சிக்கு சமையல்  எரிவாயு சிலிண்டர்கள் வந்துள்ள நிலையில் அவற்றை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட இன்று (01) அதிகாலை முதல்  வரிசையில் காத்திருந்த போதும் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படாததை அடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் எரிவாயு சிலிண்டர்களை ஏ-9 வீதியின் குறுக்காக வைத்து வீதியை மறித்து போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். 

இதையடுத்து சம்பவ இடத்துக்கு கிளிநொச்சி பொலிஸார் விரைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தருடன்  மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்டு எரிவாயு சிலிண்டர் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right