பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் அமெரிக்காவிலிருந்து இயங்கும் வைரல் என்ற பேஸ்புக் பக்கம் ஒன்று கோடிக்கணக்கான மக்களை ஒரு போலி வீடியோவை நேரலை என்று கூறி மக்களை பார்க்க வைத்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன் அமெரிக்க வைரல் பேஸ்புக் பக்கமொன்று, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இரு விண்வெளி வீரர்கள் இருப்பது போன்ற ஒரு நேரலை வீடியோவை வெளியிட்டது.

குறித்த வீடியோவை உலக முழுவதும் கோடிக்கணக்கான பேர் பார்த்துள்ளதோடு, இலட்சக் கணக்கான பேர் லைக் செய்துள்ளனர். குறித்து வீடியோ சுமார் மூன்று மணிநேரம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த வீடியோவை பல பிரபல ஊடகங்களும் தவறுதலாக ஒளிபரப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நாசா, குறித்த வீடியோ 2013 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது எனவும்,மேலும், குறித்த திகதியில் எவ்வித நேரலையும் சர்வதேச விண்வெளி நிலையம் வெளியிடவில்லை என நாசா உறுதியளித்துள்ளது.

இவ்வாறான நேரலை நிகழ்வுகள் இருந்தால் முன்னரே மக்களுக்கு அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

தற்போது, நாசா வெளியிட்டுள்ள குறித்த அறிக்கையினால் குறித்த தவறான நேரலை வீடியோ பார்த்த மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.