அளவான ஜப்பா கேக் வகையின்  6,557  மடங்கு பெரிதான இராட்சத கேக்கைத் தயாரித்து பிரித்தானிய சமையல் கலை நிபுணர்கள் புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

80 கிலோகிராம் கரும் சொக்லேட், 15 கிலோகிராம் தோடம்பழ ஜெலி மற்றும் 160 முட்டைகள் என்பவற்றைப் பயன்படுத்தி இந்தக் கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ,வெதுப்பக தயாரிப்புகளை மேற்கொள்ளும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற  பிரான்செஸ் குயின் மக்விதிஸ் ஏனைய உணவக உறுப்பினர்களுடன் இணைந்து இந்தக் கேக்கை உருவாக்கியுள்ளார்.

80 கிலோகிராம் நிறையுடைய இந்தக் கேக்கின் விட்டம்; 175 சென்ரிமீற்றராகும்.

பிரித்தானியாவின்  தனிப்பட்ட திறமைகளை அடையாளம் கண்டு அங்கீகரிக்கும் கொட் டலன்ட் நிகழ்ச்சியின் 15 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் மேற்படி கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.