(எம்.எப்.எம்.பஸீர்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதல் தொடர்பில் மேலும் 6 சந்தேக நபர்கள் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன் படி, இதுவரை கைது செய்யப்பட்ட மொத்த சந்தேக நபர்களின் எண்ணிக்கை தற்போது 23 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ( 31) சி.ஐ.டி.யினர் கைது செய்த சந்தேக நபர்களில், மொறட்டுவை நகர சபை தலைவரின் புதல்வர், அந்த நகர சபையின் 3 தொழிலாளர்கள் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் ஒருவர் மற்றும் ஓய்வு பெற்ற 56 வயதான ஆசிரியை ஒருவர் உள்ளடங்குவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.
இந்த 6 பேரும் இன்று (1) கோட்டை நீதிமன்ரில் ஆஜர்ச் செய்யப்படவுள்ளனர்.
இதனிடையே, இந்த விவகாரத்தில் நேற்று முன்தினம் (30) சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்ட பொரலஸ்கமுவ நகர சபை தலைவர் அருன பிரியதர்ஷன நேற்று ( 31) கோட்டை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரை இன்று ( 1) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM