பிரபல பாடகர் கேகே இசைநிகழ்ச்சியில் பங்கேற்ற போது மரணம்

01 Jun, 2022 | 06:53 AM
image

இந்தியத் திரையுலகின் பலமொழி பாடகர்களில் ஒருவரான கேகே என்று அழைக்கப்படுபவர் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில்  அவர் பாடல்களை பாடியுள்ளார்.

கேரளாவை சேர்ந்த 53 வயதான பாடகர் கேகே,  தமிழ் சினிமாவில் 50 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். திரைத்துறையில் அறிமுகமாவதற்கு முன்னர் 3,500 விளம்பரங்களில் பாடல் பாடியுள்ளார்.

Singer KK Dies In Kolkata: "His Songs Reflected Wide Range Of Emotions":  PM's Tribute To Singer KK

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 1997 ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு படத்தில் இடம் பெற்ற ஸ்ட்ராபெர்ரி கண்ணே பாடல் மூலம் தமிழில் கேகே அறிமுகமானார். அந்த பாடலை அவர் பெபிமணியுடன் இணைந்து பாடியிருப்பார்.

மேலும் யுவன் சங்கர் ராஜா, தேவா, வித்யாசாகர், மணி சர்மா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோர் இசையிலும் தமிழில் அவர் பாடியுள்ளார். 

காதல் வளர்த்தேன் (மன்மதன்), அப்படி போடு (கில்லி), காதலிக்கும் ஆசை (செல்லமே), நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி), உயிரின் உயிரே (காக்க காக்க),) உள்ளிட்ட அவர் பாடிய பாடல்கள் தமிழக ரசிகர்கள் இடையே பிரபலமானவை...

இந்நிலையில், கொல்கத்தா மாநகரின் நஸ்ருல் மஞ்சா பகுதியில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற கேகே ரசிகர்கள் முன்னிலையில் பாடல்களை பாடினார்.  

How KK died: Singer performed for an hour, fell sick at hotel | Colors of  India

அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  கச்சேரி முடிந்ததும் மயங்கி விழுந்த அவர் அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த வைத்தியர்கள் மாரடைப்பால் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

முன்னாக அவர் கடைசியாக பங்கேற்றிருந்த மேடை இசை நிகழ்ச்சி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனாது.

பாடகர் கேகே திடீர் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்தியப் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  பிரபல பாடகர் கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத்தின் மறைவு வருத்தமளிக்கிறது. 

அனைத்து வயதினரையும் கவர்ந்த அவரது பாடல்கள் பலவிதமான உணர்ச்சிகளை பிரதிபலித்தன. 

அவரது பாடல்கள் மூலம் நாம் எப்போதும் அவரை நினைவில் கொள்வோம். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். இவ்வாறு இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய மந்திரிகள் அமித்ஷா, அனுராக் தாக்கூர், கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ராபர் - திரை விமர்சனம்

2025-03-14 18:26:12
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2025-03-14 17:41:17
news-image

ரசிகர்களுக்கும், ஊடகத்திற்கும் நன்றி தெரிவித்த 'எமகாதகி'...

2025-03-13 18:32:12
news-image

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட 'ட்ராமா'...

2025-03-13 18:31:45
news-image

விஜய் அண்டனி நடிக்கும் 'சக்தி திருமகன்'...

2025-03-13 18:25:30
news-image

நடிகை சௌந்தர்யா மரணத்தில் மோகன்பாபுவுக்கு தொடர்பா?...

2025-03-13 10:29:57
news-image

மாதவன் நடிக்கும் 'டெஸ்ட்' படத்தின் சிங்கிள்...

2025-03-12 15:38:17
news-image

இலங்கை மக்கள் அன்பானவர்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன்;...

2025-03-12 17:05:46
news-image

நடிகை பாவனா நடிக்கும் 'தி டோர்'...

2025-03-12 15:35:09
news-image

படவா - திரைப்பட விமர்சனம்

2025-03-12 11:29:42
news-image

சத்யராஜ் - சசிகுமார் - பரத்...

2025-03-12 21:10:29
news-image

நடிகர் 'கயல்' வின்சென்ட் நடிக்கும் 'அந்தோனி...

2025-03-11 17:36:01