(இராஜதுரை ஹஷான்)
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சினை தவிர்த்து பிறிதொரு அமைச்சுக்களை வகிக்க கூடாது என்ற வரையறை உள்வாங்கப்பட வேண்டும். பொறுத்தமற்ற தரப்பினர் அமைச்சின் செயலாளர்களாக நியமிக்கப்பட்டதால் முழு அரசசெயலொழுங்கும் சீரழிந்துள்ளது.
இனி வரும் காலங்களில் அமைச்சின் செயலாளர்கள் பொதுநிர்வாக சேவையில் இருந்து துறைசார் அடிப்படையில் நியமித்தல் கட்டாயமாக்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் ,முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்ட மூலவரைபு தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி நீதியமைச்சரிடம் பல திருத்த யோசனைகளை முன்வைத்துள்ளது.நாணய சபையின் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சரவையின் செயலாளர்கள் ஆகியோர் அரசியலமைப்பு சபை ஊடாக நியமிக்கப்பட வேண்டும்.
அத்துடன் அரசியலமைப்பு சபை முறையான விடயதானங்களுக்கு அமைய செயற்படும் வகையில் திருத்தங்கள் கொண்டு வருதல் அவசியமாகும்.முப்படைகளின் தளபதி என்ற அடிப்படையில் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சினை வகித்தல் அவசியமாகும்.
பாதுகாப்பு அமைச்சினை தவிர்த்து ஜனாதிபதி ஏனைய அமைச்சுகளை வகிக்க கூடாது என்ற வரையறை 21ஆவது திருத்தத்தில் உள்வாங்கப்பட வேண்டும்.
அரசியலமைப்பினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரம் தொடர்பில் சர்ச்சைக்குரிய விடயங்கள் தற்போது காணப்படுகிறது ஆகவே பொது மன்னிப்பு தொடர்பி;ல் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க விசேட ஆலோசனை சபை ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
பொது நிர்வாக சேவைக்கு அப்பாற்பட்ட வகையில் அமைச்சின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டதால் முழு அரச செயலொழுங்கும் சீரழிந்துள்ளது.
இனிவரும் காலங்களில் அமைச்சின் செயலாளர்கள் பொது நிர்வாக சேவைத்துறையில் இருந்து துறைசார் அடிப்படையில் நியமிக்கப்படுதல் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM