21 ஆவது திருத்தத்தை தோற்கடிக்க ஆளும் தரப்பிற்குள் ஒரு தரப்பினர் சூழ்ச்சி  - ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி 

Published By: Digital Desk 4

31 May, 2022 | 09:42 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டு மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள பின்னணியில் அமைச்சரவை அமைச்சர்கள் பொது மக்களுக்கு பிறிதொரு சுமையாக உள்ளார்கள்.

40 இராஜாங்க அமைச்சுக்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை முற்றிலும் தவறானது. அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை தோற்கடிக்க ஆளும் தரப்பிற்குள் ஒரு தரப்பினர் சூழ்ச்சி செய்கிறார்கள் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமனம் | Virakesari.lk

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,    

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்தினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியை தோற்றுவித்து சமூக கட்டமைப்பில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தியது.

நாட்டில் ஜனநாயகத்தை நிலைப்படுத்தல்;,ராஜபக்ஷ குடும்பத்திடமிருந்து நாட்டை பாதுகாத்தல்,அரசியமைப்பின் 20ஆவது திருத்தத்தை இரத்து செய்தல் உள்ளிட்டவை நாட்டு மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளன.மக்களின் நிலைப்பாட்டிற்கு மதிப்பளிக்கும் வகையில் அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டமூல வரைபு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

து தற்போதைய அரசாங்கத்தின் கட்டமைப்பு எத்தன்மையிலானது என்பது விளங்கவில்லை.அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை முறையற்ற வகையில் இணைத்துக்கொண்டு அவர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்கி மக்கள் வெறுத்த பழைய விடயங்களையே தற்போதைய அரசாங்கம் செயற்படுத்துகிறது.

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

பிரதமர், அமைச்சரவை மற்றும் அமைச்சரவையின் செயலாளர்கள் தேசிய சபையின் ஊடாக தெரிவு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

சர்வ கட்சி அரசாங்கத்தினை ஸ்தாபித்து அதனூடாக அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ளவும்,சர்வகட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்படாவிடின் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்காமல்,சுயாதீனமாக செயற்பட்டு அரசாங்கத்தின் சிறந்த தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்க ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக திPர்மானிக்கப்பட்டது.கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றுள்ளார்கள்.

 ஒருசில அரசியல் கட்சிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இலக்காக்க கொண்டு அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.நாட்டு மக்கள் சிறந்த மாற்றத்தை எதிர்பார்த்துள்ள வேளையில் ஒரு தனி நபரை இலக்காகக் கொண்டு முழு அரசியல் திருத்தத்தை எதிர்ப்பது முறையற்றதாகும்.பொதுத்தேர்தல் இடம்பெற்றாமல் மக்கள் தமக்கான தலைவரை தெரிவு செய்துக்கொள்வார்கள்.தவறுகளை திருத்திக்கொள்ள 21ஆவது திருத்தத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை தோற்கடிக்க ஆளும் தரப்பிற்குள் ஒரு தரப்பினர் சூழ்ச்சி செய்கிறார்கள்.21ஆவது திருத்தத்pற்கு எதிராக செயற்படுபவர்களை நாட்டு மக்கள் கவனித்துக்கொள்ள  வேண்டு;ம்.ஒரு தனிநபரை பாதுகாக்க மக்கள் அரசியல்வாதிகளை பாராளுமன்றிற்கு அனுப்பவில்லை.

நாட்டு மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ள வேளையில் தற்போதைய அமைச்சரவை மக்களுக்கு பிறிதொரு சுமையாக உள்ளது.

நடைமுறைக்கு சாத்தியமற்ற வகையில் அமைச்சு பதவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன.40 இராஜாங்க அமைச்சு பதவிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை முற்றிலும் தவறானது.

நாட்டு மக்களின் எதிர்பார்ப்பிற்கமைய தற்போதைய அரசாங்கம் செயற்பட்டால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் எதிர்க்கொண்ட பாரதூரமான விளைவுகளை தற்போதைய அரசாங்கம் எதிர்க்கொள்ள நேரிடும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவரச...

2024-12-09 17:25:22
news-image

விஷமிகளால் கொத்தி எரிக்கப்பட்ட ஆலயக் கதவு

2024-12-09 17:17:43
news-image

பாராளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் அமெரிக்கா தொடர்ந்தும்...

2024-12-09 17:30:51
news-image

மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும்...

2024-12-09 17:06:14
news-image

மசாஜ் நிலையங்களுக்குள் அத்துமீறி நுழைந்து கூரிய...

2024-12-09 16:36:38
news-image

பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் காயம் ;...

2024-12-09 16:47:56
news-image

பலவீனமடைந்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை...

2024-12-09 16:33:55
news-image

பிரதேச ஒருங்கிணைப்பு தலைவராக பிரதி அமைச்சர்...

2024-12-09 16:29:59
news-image

நஷ்ட ஈடு கேட்டு மூதூரில் விவசாயிகள்...

2024-12-09 17:27:28
news-image

கண்டி - கொழும்பு வீதியில் விபத்து...

2024-12-09 16:05:50
news-image

டிசம்பர் மாதத்தின் முதல் எட்டு நாட்களில்...

2024-12-09 15:51:18
news-image

இலங்கை கடற்படைத் தளபதி - வடமாகாண...

2024-12-09 17:01:40