இலங்கைக்கு கடத்தவிருந்த  பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது -  ஒருவர் தப்பி ஓட்டம்

By T Yuwaraj

31 May, 2022 | 05:50 PM
image

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம்  பட்டிணம் காத்தான் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த  ஒரு கோடி மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளுடன் இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளதோடு ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம்  பட்டிணம் காத்தான் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதப்படுத்தப்பட்ட சுமார் 200 கிலோ மதிப்புள்ள கடல் அட்டைகளை, வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருந்தனர். 

இதன் போது பட்டணம் காத்தான்  புறவழிச் சாலை பகுதியில்  கேணிக்கரை பொலிஸார் இருவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ததில், ஒருவர் தப்பிச் சென்ற நிலையில், மற்றொருவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்ததால், விசாரணை செய்ததில் இலங்கைக்கு படகு மூலம் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்பட இருந்தமை தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரை  பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவரிடம் இருந்த சுமார் 200 கிலோ மதிப்புள்ள ஒரு கோடி மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்து, மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right