இறக்குமதிக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளை பாராளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

By T. Saranya

31 May, 2022 | 05:22 PM
image

(எம்.மனோசித்ரா)

சட்டபூர்வமற்ற வெளிநாட்டு நாணய வணிக நடவடிக்கைகள் அதிகரிப்பதைத் தடுப்பதற்காகவும் மற்றும் சரக்குகள் சுங்க விடுவிப்பின் போதான இறக்குமதிக்கான குறைந்த செலவுச்சிட்டையை சமர்ப்பிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கிலும், இலங்கை மத்திய வங்கியின் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஒருசில கொடுப்பனவு முறைகளுக்கு மட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

திறந்த கணக்கு கொடுப்பனவு முறை, சரக்கு விற்பனையின் பின்னர் பணம் கொடுப்பனவு முறை, கொடுப்பனவின் பின் ஆவணச் செலுத்தல் முறை, ஏற்றுக்கொள்ளலின் அடிப்படையில் ஆவணச் செலுத்தல் முறை ஆகியவற்றை மட்டுப்படுத்தக் கூடிய வகையில் 1969 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் '2022 ஆண்டின் 07 ஆம் இலக்க கொடுப்பனவு முறைகளுக்கான இறக்குமதிக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகள்' மேற்கொள்ளப்பட்டு மே மாதம் 06 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள அத்தகைய ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்ட திகதியிலிருந்து ஒரு மாதகாலத்தில் அமைச்சரவை அங்கீகாரத்துடன் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படல் வேண்டும். 

அதற்கமைய, 2022 ஆண்டின் 07 ஆம் இலக்க செலுத்தல் முறைகளுக்கான இறக்குமதிக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right